சிங்கப்பூரின் ஏற்கனவே இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியரான நாகேந்திரன் என்பருக்கு அடுத்த வாரம் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது.
இந்நிலையில் தட்சணாமூர்த்தி என்ற மற்றொரு இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியரும் அடுத்த வாரம் சிங்கப்பூரில் தூக்கிலிடப்படவுள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றது. தட்சிணாமூர்த்தி கட்டையாவின் குடும்பத்தினருக்கு கடந்த ஏப்ரல் 21ம் தேதி அளிக்கப்பட்ட கடிதத்தில் ஏப்ரல் 29-ம் தேதி அவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவலை freemalaysiatoday உள்பட பல மலேசிய மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் உறுதிசெய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தட்சிணாமூர்த்தியின் நீதிமன்ற மேல்முறையீடு மே 20 அன்று விசாரணைக்கு வர திட்டமிடப்பட்ட போதிலும், அவருக்கு மரணதண்டை ஏப்ரல் 29ம் தேதி நிறைவேற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2015ம் ஆண்டு 44.96 கிராம் டயமார்ஃபின் போதைப்பொருளை சிங்கப்பூருக்குள் கடத்தியதற்காக தட்சிணாமூர்த்தி இந்த தண்டனையை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிங்கப்பூர் அரசு தட்சிணாமூர்த்தியின் மரணதண்டனை அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெறவும், நீதிமன்றச் செயல்பாடுகள் தடையின்றி தொடர அனுமதிக்கவும் வலியுறுத்தி வருகின்றது பல அமைப்புகள்.
மலேசியார் நாகேந்திரனின் கருணை மனு ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட நிலையில் சில வாரங்களுக்கு முன்பு அவருக்கு மரண தண்டனை அளிக்கவிருப்பதை உறுதி செய்தது சிங்கப்பூர் அரசு.