TamilSaaga

“கொரோனாவால் இந்தியாவிற்கு ஏற்பட்ட கஷ்டம்” – Google சுந்தர் பிச்சையின் நெகிழ்ச்சியான பதிவு

தமிழகத்தில் பிறந்து சென்னையில் தனது படிப்பை முடித்து இன்று உலகே வியந்து பார்க்கும் கூகுள் நிறுவனத்தின் CEOவாக வலம்வரும் சுந்தர் பிட்சையிடம் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு மிகவும் உணர்ச்சிபூர்வமான பதில் ஒன்றை அளித்துள்ளார் அவர்.

பிரபல BBC நிறுவனம் அவரை கலிபோர்னியா மாகாணத்தில் சந்தித்து பேட்டிகண்டபோது அந்த உரையாடலின் இடையே, ​​நேர்காணல் செய்பவர் சுந்தரிடம் அவர் கடைசியாக அழுதது எப்போது? என்ற கேள்வியை முன்வைத்தார்.

இதற்கு பதிலளித்த சுந்தரம் பிச்சை “கொரோனா காரணமாக இந்த உலகம் முழுவதும் பல சவக்கிடங்குகளுக்கு முன்பு பிணங்களோடு பல லாரிகள் நிற்பதை பார்த்து நான் கண்ணீர் வடித்தேன். மேலும் இந்தியாவில் கடந்த சில மாதங்களில் நடந்த விஷயங்களை பார்த்து நான் மனம் உடைந்து போனேன் என்றார்.

இந்தப் பெருந்தொற்று காரணமாக இந்தியா பட்ட கஷ்டங்கள் எனக்கு மிகுந்த கண்ணீரை வரவழைத்தது. நான் அமெரிக்க குடிமகன் என்றாலும் இன்னும் என்னுள் அந்த இந்தியன் இருக்கிறான் என்றார் சுந்தர். என்னில் மிகப்பெரிய பாதி இந்தியன் தான், தமிழ் நாட்டில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் நான். வளர வளர, தொழில்நுட்பம் தான் எனக்கு இந்த உலகத்தை அறிமுகப்படுத்தியது என்றார்.

Related posts