பாங்காக்கில் 25 வயது சுற்றுலாப் பயணி ஒருவர், நடுத்தெருவில் தன்னை அணுகி கட்டிப்பிடித்த ஒரு பெண், ஒரு சில வினாடிகளில் தனது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்து சென்றதாக கூறியுள்ளார். தற்போது அந்த பெண்ணைக் கண்டறிய சமூக ஊடகங்களில் உதவிகளை கேட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். பெல்ஜியத்தைச் சேர்ந்த ஃபிரடெரிக் டி வ்ரீஸ் என்ற அந்த வாலிபர். தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள சுகும்விட் சோய் 21ல் உள்ள ஒரு சந்திப்பில் தான் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறுகிறார்.
அந்த வாலிபர், ஒரு Lady Boy தான் இந்த திருட்டுக்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளார். தாய்லாந்தில் திருநங்கைகளைக் குறிக்க பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது ஒரு வார்த்தை தான் Ladyboy. சுகும்விட் சாலை பகுதி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பாங்காக்கில் வசிக்கும் வெளிநாட்டினர் மத்தியில் மிகவும் பிரபலமானது. அதுமட்டுமல்லாமல் அந்த பகுதியில் அதிக அளவில் சிவப்பு விளக்கு பகுதி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் மார்ச் 30 அன்று பாதிக்கப்பட்ட அந்த இளைஞர்