TamilSaaga

சிங்கப்பூரில் 9 மாத கர்ப்பிணி என்றும் பாராமல்… தவறே செய்திருந்தாலும் எட்டி உதைப்பது நியாயமா? – சிக்கலில் SDA அதிகாரிகள்

சிங்கப்பூரில் ஒரு நிறைமாத கர்பிணி பெண், SDA என்று அழைக்கப்படும் Safe Distancing Ambassadors அதிகாரிகளால் தாக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது நிலைமையை விளக்கி கடந்த மார்ச் 16 அன்று பேஸ்புக்கில் ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து மார்ச் 17 அன்று, HDB அளித்த தகவலின்படி அந்த மூன்று பேர் கொண்ட குழு உண்மையில் SDAக்கள் தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 55 “ஆணுறைகள்”.. ஒரே நாளில் 3, 4 பெண்களுடன் “உடலுறவு” – நீச்சல் வீரர் Ryan Lochte பகிர்ந்த உண்மை

SDA என்றால் பாதுகாப்பான தொலைதூரத் தூதராக பணியாற்றுபவர்கள், ஒரு SDA அதிகாரியாக அவர்கள் பணியில் இருக்கும் பொது இடத்திலோ அல்லது HDB போன்ற இடங்களிலோ நுழையும் அனைவரும் பாதுகாப்பான தொலைதூர நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பதை உறுதிசெய்ய வேண்டும். பொது இடங்களில் மக்கள் எல்லா நேரங்களிலும் முகமூடிகளை அணிக்கின்றார்களா? என்பதை சோதனை செய்ய வேண்டும்.

என்ன நடந்தது?

அந்த பெண்ணின் கூற்றுப்படி, அவரது குடும்பத்தினர் கடந்த மார்ச் 8ம் தேதி மாலை 6 மணியளவில் ஒரு விளையாட்டு மைதானத்தில் இருந்தனர். அப்போது அந்த பெண்ணின் கணவர், இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் அடங்கிய குழு அங்கு நின்றுகொண்டிருப்பதையும், தங்கள் குழந்தைகளை அவர்கள் புகைப்படம் எடுப்பதைக் கண்டார். அவர்கள் ஏன் அவ்வாறு செய்கிறார்கள் என்று கேட்க, அவர் அவர்களை அணுகியபோது, ​​​​குழுவில் இருந்த ஒருவர் “நீங்கள் எதுவும் கவலைகொள்ளத்தேவையில்லை” என்றும் “நான் அவற்றை பின்னர் Delete செய்துவிடுவேன்” என்றும் கூறியுள்ளார்.

இந்த விஷயத்தில் மார்ச் 17 அன்று HDB அளித்த தகவலின்படி, அந்த SDA அதிகாரிகள் சம்பவத்தன்று “ரோந்து பணியில்” இருந்தனர் என்றும் மற்றும் “வழக்கமாக தாங்கள் சேகரிக்கும் தரவுகளுக்காக சில படங்களை எடுத்துக்கொண்டனர்” என்றும் கூறியது. ஆனால் பிரச்சனை அதுவல்ல, பணியில் இருந்த அந்த SDA அதிகாரிகள் அருகில் நின்ற அந்த பெண்ணின் கணவர் காரணமின்றி தள்ளிவிட்டு அந்த இடத்தை விட்டு ஓடியதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

மேலும் அந்த ஜோடி, ஓடிய அந்த குழுவை துரத்தியதாகவும் கூறப்படுகிறது. அந்த கணவர் மிதி வண்டியின் மூலம் அவர்களை துரத்த அந்த 9 மாத கர்பிணி பெண் கால் நடையாக அவர்களை பின்தொடர்ந்துள்ளார். அப்போது அந்த மூன்று பேர் கொண்டா SDA அதிகாரிகள் குழுவில் இருந்த ஒருவர் அந்த கர்ப்பிணியை கீழே தள்ளியதாகவும், அவர் மீண்டும் எழுந்திருக்க முயன்றபோது மற்றொருவர் தன்னை உதைத்தாகவும் அவர் கூறியுள்ளார்.

இறுதியில் உடனே குழுவில் இருந்த ஒருவரை போலீசார் வரும்வரை அந்த கணவர் இருகப்பற்றிக்கொள்ள மற்ற இருவரும் அங்கிருந்து ஓடியுள்ளார்கள். அங்கிருந்து ஓடிய ஒருவரின் IDயும் கீழே கிடந்ததை அந்த தம்பதி போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

“கூன் விழுந்தது உடம்பில்.. என் மனதில் இல்லை” – உழைப்புக்கு Good Bye சொல்லாமல் 89 வயதிலும் போராடும் “சிங்கப்பூர் தாத்தா”

இன்னும் இந்த வழக்கில் என்ன நடந்தது என்பது முழுமையாக தெரியவில்லை, அந்த தம்பதிகளும் தங்களுக்கான நீதி கிடைப்பதற்காக காத்திருக்கின்றனர். மேலும் இந்த விஷயத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருவதால், “சம்பவத்தை எந்தவித கோணத்திலும் ஊகிக்க வேண்டாம்” என்று பொதுமக்களை HDB வலியுறுத்தியது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts