நமது சிங்கப்பூர் மட்டுமில்லாமல் அண்டை நாடான இந்தியா உள்பட உலக அளவில் பல நாடுகளில் தொற்றின் அளவு கடந்த சில வாரங்களாகவே பெரிய அளவில் வீழ்ச்சியை கண்டு வருகின்றது. இது இந்த தொற்று நோயின் முடிவாக இருக்குமா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என்றபோதும் பல நாட்டு அரசுகள் தொடர்ந்து வெளிநாட்டு பயணிகளுக்காக பல தளர்வுகளை தொடர்ந்து அறிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நமது அண்டை நாடான இந்தியாவிலும் தொற்றின் அளவு தொடர்ந்து குறைந்து வரும் இந்த நேரத்தில் அந்நாட்டு மத்திய அரசு வெளிநாட்டு பயணிகளுக்கு விதித்திருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது. இது குறித்து அந்நாட்டு மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த பிப்ரவரி 10ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் “பிற நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் இனி 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளது”
விளக்கிக்கொள்ளப்பட்ட கட்டுப்பாடுகள் என்ன?
சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் UK உள்பட உலக அளவில் 82 நாடுகளுக்கு இந்த தளர்வை அறிவித்துள்ளது இந்திய அரசு.
இனி இந்தியா புறப்படும் முன் 72 மணிநேரத்திற்கு முன்பு எடுக்கவேண்டிய Negative RT – PCR சோதனைக்கு பதிலாக பயணிகள் தங்களுடைய இரு டோஸ் தடுப்பூசி சான்றிதழை Upload செய்யலாம்.
இந்தியா வந்திறங்கிய பிறகு 7 நாள் கட்டாய வீட்டு தனிமையில் இருக்கவேண்டும் என்று முன்பு கூறியிருந்த நிலையில் தற்போது இந்தியா வந்தபிறகு 14 நாட்கள் சுய மதிப்பீட்டில் இருந்தால் போதுமானது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இனி இந்தியா வரும் அனைவருக்கும் கட்டாய On Arrival பெருந்தொற்று சோதனை இருக்காது, பயணிகள் இந்தியா வந்தது ஏர்போர்ட் விதிமுறைகளுக்கு உள்பட்டு வெளியேறலாம்.
இருப்பினும் இந்தியா வரும் 2 சதவிகித வெளிநாட்டு பயணிகளுக்கு Random Test முறையில் தொற்று பரிசோதனை செய்யப்படும். ஆனால் அவர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உடனடியாக வெளியேற அனுமதிக்கப்படுவர்.
இந்த தளர்வுகள் அனைத்தும் நாளை பிப்ரவரி 14ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது.