இந்த ஆண்டு பிப்ரவரி 14 பெரிய அளவிலான ஒரு ரொமான்டிக் நாளாக இருக்காது என்றே கூறலாம், ஆமாம் அப்படி காரணம் என்ன என்று கேட்டால் இந்த மாதம் வரவிருக்கும் இன்னொரு அற்புத நாள் தான். நமது சிங்கப்பூரில் சுமார் 480க்கும் மேற்பட்ட ஜோடிகள் வரும் 22.2.2022 அன்று சிங்கப்பூரில் உள்ள ஏராளமான தம்பதிகள் திருமணம் செய்துகொள்ள பதிவு செய்து வருகிறார்களாம்.
பிப்ரவரி 22 அன்று ROMல் (Registry of Marriages) தங்கள் திருமணத்தை பதிவு செய்ய குறைந்தபட்சம் 483 தம்பதிகள் தாக்கல் செய்துள்ளனர் என்று ROM செய்தித் தொடர்பாளர் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அளவிற்கு ஏற்கனவே ஜனவரி 24ம் தேதி பதிவானது என்று குறிப்பிடப்படுகிறது.
ஜனவரி 31ம் தேதி வரை, திருமண அறிவிப்பை தாக்கல் செய்ய, தம்பதிகளுக்கு அவகாசம் இருந்ததால், அன்றைய தினம் திருமணம் செய்து கொள்ளும் இறுதி ஜோடி எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என, தெரிகிறது. ROM செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஒரு வார நாளில் சராசரியாக 58 திருமணங்கள் நடைபெறுகின்றன, அதாவது பிப்ரவரி 22 அன்று திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் வழக்கமான எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு அதிகம்.
சிங்கப்பூரில் திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பான சிங்கப்பூர் புள்ளியியல் துறையின் அறிக்கையில், 2020ல் 22,651 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதே ஆண்டில் 6,595 விவாகரத்துகள் நடந்துள்ளன.
முந்தைய ஆண்டை விட திருமணங்கள் மற்றும் விவாகரத்துகளின் எண்ணிக்கை முறையே 10.9 சதவீதம் மற்றும் 8.7 சதவீதம் குறைந்துள்ளது, இருப்பினும், கோவிட்-19 மற்றும் சர்க்யூட் பிரேக்கர் இந்த சரிவுக்கு பங்களித்திருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏன் 22.2.2022 ஒரு சிறப்பான நாள்?
முதலாவதாக, 22/2/22 என்பது ஒரு பாலிண்ட்ரோமிக் தேதி, அதாவது வலமிருந்து இடமும், இடமிருந்து வலமும் ஒரே மாதிரி வருகின்றது.
இது கடைசியாக 11 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 11/1/11 அன்று நடந்தது, என்பது குறிப்பிடத்தக்கது, அதேபோல இனி 33/3/33 என்ற தேதியோ அல்லது 44/4/44 என்ற தேதிகளோ வரப்போவதில்லை என்பதால் இது ஒரு மிக அதிசய நாளாக பார்க்கப்படுகிறது.
அதேபோல இந்த தேதி வாரத்தின் இரண்டாவது நாளான செவ்வாய் அன்று வருகிறது. இது நல்ல நாளாக கருதப்படுகிறது.