சிங்கப்பூரில் புதிய வகை வைரஸ் Omicron பரவல் காரணமாக சுமார் ஒரு மாத காலமாக தடைபட்டிருந்த தடுப்பூசி பயணப்பாதை மீண்டும் கடந்த ஜனவரி மாதம் இறுதியில் தொடங்கியது. ஆனால் இந்த சேவையிலும் குறைந்த பட்சமான பயணிகளே சிங்கப்பூர் வர நமது அரசு அனுமதி தந்தது. இந்நிலையில் பிற நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வரும், குறிப்பாக தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் வரும் விமானங்கள் கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக விமான சேவை நிறுவனங்களால் ரத்து செய்யப்பட்டு வந்தது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் சுமார் 6க்கும் மேற்பட்ட விமான சேவைகளை தமிழகத்திலிருந்து குறிப்பாக திருச்சியில் இருந்து சிங்கப்பூர் வரும் விமானங்களை ரத்து செய்த நிலையில் தற்போது மீண்டும் indigo நிறுவனம் திருச்சி சிங்கப்பூர் இருமார்கமாக செயல்படவிருந்த சுமார் 6 விமானங்களை ரத்து செய்துள்ளது பயணிகளும் பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.
திருச்சி – சிங்கப்பூர் விமான சேவை
இந்த 2022ம் ஆண்டில் வரும் பிப்ரவரி 10, 17 மற்றும் 22 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து சிங்கப்பூர் வரவிருந்த Indigo விமானங்கள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பயணிகளுக்கு உரிய தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் – திருச்சி விமான சேவை
சிங்கப்பூரிலிருந்து திருச்சி செல்லவிருந்த Indigo விமான சேவைகளின் இந்த 2022 ஆண்டின் பிப்ரவரி 9, 27 மற்றும் மார்ச் 1ம் தேதி ஆகிய விமானங்கள் தற்பொழுது ரத்து செய்யப்பட்டுள்ளது.
காரணம் என்ன?
பொதுவாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்தியாவில் இருந்து குறைந்த அளவிலான பயணிகளே சிங்கப்பூர் வருவது வழக்கம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இப்பொழுது சிங்கப்பூர் இந்தியா இடையே சில தடுப்பூசி வேறுபாடுகளும் இருந்து வரும் நிலையில் முன்னறிவிப்பின்றி விமானசேவை நிறுவனங்கள் அவர்களது விமான சேவைகளை குறிப்பிட்ட தேதிகளில் ரத்து செய்து வருகின்றனர். மேலும் இது போன்ற மாதங்களில் மிக குறைந்த அளவிலான பயணிகளே விமான டிக்கெட்களை புக் செய்வதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.
பயணிகள் என்ன செய்ய வேண்டும்?
இதுபோன்று விமான சேவை நிறுவனங்களே பயணத்தை ரத்து செய்யும்போது Refund கிடைக்க அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளது. அல்லது அவை மீண்டும் வேறொரு தேதியில் விமான டிக்கெட்களை பெற உதவியாக இருக்கும். ஆகையால் டிக்கெட்கள் விமான சேவை நிறுவனங்களால் ரத்து செய்யும்போது உடனடியாக குறிப்பிட்ட நிறுவனத்தை அணுகி Refund அல்லது Date Change குறித்து கேட்டறிய வேண்டும். அதே நேரத்தில் டிக்கெட் cancel செய்யப்பட்ட நிலையில் பயணிகளுக்கு விமான சேவை நிறுவனங்கள் முறையாக வழியில் தகவல்களை அளிக்கின்றனர்.
அப்படி தகவல் அளித்தும் பயணிகள் பலர் குறிப்பிட்ட நாளில் விமான நிலையத்திற்கு செல்கின்றனர். ஆனால் பயணிகள் இதுபோன்ற செயல்களை இந்த தொற்று காலத்தில் தவிர்ப்பது மிகவும் நல்லது. நிச்சயம் டிக்கெட் குறித்து ஏதேனும் update இருந்தால் விமான சேவை நிறுவனம் நிச்சயம் உங்களை தொடர்புகொள்ளும்.
News Source
நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007