TamilSaaga

CECA உடன்பாடு – “சிங்கப்பூர் வருவதில் இந்தியர்களுக்கு நிபந்தனையற்ற அனுமதி இல்லை”

கடந்த 2005ல் கையெழுத்தான CECA உடன்பாடு குறித்து சமூக ஊடகங்களிலும், எதிர்க்கட்சியினர் தரப்பிலும் வெளியாகும் செய்திகளுக்கு சுகாதார அமைச்சர் ஓங் யி காங் (Ong Ye Kung) பதில் அளித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “சிங்கப்பூர் – இந்தியா இடையேயான விரிவான பொருளியல் ஒத்துழைப்பு உடன்பாட்டில் (CECA – India–Singapore Comprehensive Economic Cooperation Agreement), இந்திய நாட்டின் நிபுணர்கள் எந்த நிபந்தனையும் இல்லாமல் சிங்கப்பூருக்கு வர அனுமதி வழங்கப்படவில்லை.

சிங்கப்பூரில் வசிக்கவும், வேலை செய்யவும் நிரந்தரமாக தங்குவது அல்லது குடியுரிமை பெறுவதில் எவரை அனுமதிக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் முழு உரிமையும் அரசாங்கத்திடம் உள்ளது” என்று அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், “இந்திய நாட்டின் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் (பிஎம்இ) போன்றோர்களை நிபந்தனையற்ற முறையில் சிங்கப்பூரில் அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்த உடன்பாட்டில் எங்குமே குறிப்பிடப்படவில்லை.

சிங்கப்பூரில் வேலை அனுமதி வழங்கவும் குடிநுழைவு அனுமதியிலும் அரசாங்கத்துக்கு உள்ள உரிமையை CECA எவ்விதத்திலும் பாதிக்கவில்லை” என்று அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்த CECA உடன்பாடு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தீர்மானம் முன்வைக்குமாறு அமைச்சர் கா. சண்முகம் முன்னேற்றக் கட்சியிடம் மே மாதம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts