TamilSaaga

சிங்கப்பூர் எம்பிளாய்மென்ட் பாஸ் : இரட்டிப்பான இந்தியர்கள் விகிதம்

சிங்கப்பூர் நாட்டில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெறும் 14 விழுக்காடு இருந்த எம்பிளாய்மெண்ட் பாஸ் பெற்ற இந்தியர்களின் விகிதம் என்பது தற்பொழுது 25 என்று கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு காரணம் சிங்கப்பூரின் மின்னலிக்கப் பொருளியலின் விரைவான வ;வளர்ச்சியே காரணம் என்றும். மாறாக சிங்கப்பூர் இந்தியா இடையிலான விரிவான பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பு உடன்­பாடு கார­ண­மாக இந்த ‘எம்­பி­ளாய்­மென்ட் பாஸ்’ வைத்திருக்கும் இந்­தி­யர்­க­ளுக்கு அதிக அளவில் சாத­க­மாக நடந்­து­கொள்­வ­தால் இது நிக­ழ­வில்லை என்றும் அமைச்சர் டான் தெரிவித்தார்.

இதே காலகட்டத்தில் சிங்கப்பூரில் இருக்கும் சீன நாட்டவர் விகிதம் கிட்டத்தட்ட நிலையாக இருந்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே கடந்த ஆண்டு வெளிநாடுகளில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் அலுவலகங்களிலிருந்து அவற்றின் சிங்கப்பூர் கிளைகளுக்கு அல்லது துணை நிறுவனங்களுக்கு சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிகமான பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

Related posts