TamilSaaga

சிங்கப்பூரில் போலி வெள்ளி நோட்டுகள்.. சிக்கிய 3 பேர் – போலீஸ் தீவிர விசாரணை

போலி பண நோட்டுகளின் புழக்கம் அதிகாரிகளை கவலை அடையச் செய்திருக்கிறது. இந்நிலையில், போலி நோட்டுகளை தயாரித்து அவற்றைப் பயன்படுத்தத் திட்டம் தீட்டிய 3 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில், கடந்த ஞாயிற்றுகிழமை (ஜுலை.4) 27, 44 ஆகிய வயதுள்ள இரு நபர்களை போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய சோதனையில் மொத்தம் 17,500 வெள்ளி மதிப்புள்ள 100 போலி வெள்ளி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக, 44 வயதான மற்றொரு நபர் மீது இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளது.

அதேபோல், போலியாக 100 வெள்ளி நோட்டைப் பயன்படுத்தியதாக சந்தேகத்தின் அடிப்படையில், 63 வயதான வேறொரு நபரும் கடந்த ஞாயிறன்று கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரிடம் போலீஸ் நடத்திய விசாரணையில், 100 போலி வெள்ளி நோட்டும், போதைப்பொருள் தொடர்பான சாதனங்களும் கண்டறியப்பட்டன.

சிங்கப்பூரில் போலி நோட்டுகளைத் தயாரித்தாலோ, அல்லது அதை பயன்படுத்தினாலோ, 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

Related posts