சிங்கப்பூரில் கடந்த வெள்ளியன்று கேலாங் ரோட்டில் உள்ள ஒரு கடையில் பொருட்கள் வாங்க போலி நோட்டுகள் வழங்கப்பட்டதாக அப்பகுதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரின் வர்த்தக விரிவாக்க அதிகாரிகள் நடத்திய அதிரடி விசாரணையில் அந்த போலி நோட்டுகளை மாற்றிய ஆசாமி கண்டுபிடிக்கப்பட்டார். 27 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபர் சம்பவம் நடந்த 10 மணி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டார்.
பரிவர்த்தனை மூலமாக அந்த ஆண்டவருக்கு கிடைத்ததாக நம்பப்படும் 10 வெள்ளி மதிப்புள்ள 6 நோட்டுகளும். 2 வெள்ளி மதிப்புள்ள 3 நோட்டுகளும் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த சனிக்கிழமை அந்த ஆடவர் மீது குற்றம்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
போலி நோட்டுகளை பரிவர்த்தனை செய்த குற்றத்திற்காக தற்போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அந்த வாலிபருக்கு குற்றம் நிரூபணமாகும் பட்சத்தில் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.