ஒரு பெண்ணுக்கு அவருடைய விமான பயணத்தின் நடுவழியில் அவருடைய கோவிட்-19 சோதனை முடிவைப் பெற்றதால், விமானத்தின் கழிப்பறையில் தன்னைத் தனிமைப்படுத்த முடிவு செய்துள்ள சம்பவம் பேசுபொருளாக தற்போது மாறியுள்ளது. அவர் தனது அனுபவத்தை 15 வினாடிகள் கொண்ட TikTok வீடியோவில் பதிவிட்டுள்ளார், இது இதுவரை 1.6 மில்லியனுக்கும் அதிகமான லைக்களைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மரிசா ஃபோட்டியோ என்ற அந்த பயணி, தனது விமானப்பயணத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட இரண்டு PCR சோதனைகளிலும் பெருந்தொற்றுக்கு எதிராக “நெகடிவ்” முடிவுகளை பெற்றுள்ளார். அதன் பிறகு ஐஸ்லாண்டேர் விமானத்தில் பயணம் செய்யும் போது, அவர் சோதனை மேற்கொண்டபோது பெருந்தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்துள்ளார் என்று Icelandair நிறுவனம் இதையும் படியுங்கள் : “சிங்கப்பூர் OCBC வங்கி சம்பந்தப்பட்ட மோசடிகள்” : 469 வாடிக்கையாளர்களிடம் சுருட்டப்பட்ட 8.5 மில்லியன் – அம்பலமானது எப்படி?
5 மணி நேரம் கொண்டு அந்த விமான பயணத்தில் அவர் சுமார் 3 மணிநேரம் அந்த விமான கழிவறையில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். ஃபோட்டியோ மூன்று அடுக்கு முகமூடிகளை அணிந்திருந்ததாகத் அந்த வீடியோவில் தோன்றியது. இரண்டு பாட்டில் தண்ணீர் மற்றும் பிரிங்கிள்ஸ் உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆகியவற்றை கழிவறைக்குள் அவர் வைத்திருந்தது காணொளியில் தோன்றியது. ஐஸ்லாண்டேர் விமானப் பணிப்பெண் மிகுந்த கவனத்துடன் தன்னை கண்காணித்துக்கொண்டதாகவும். தண்ணீர் மற்றும் உணவு என்னிடம் இருப்பதை அவர் அடிக்கடி உறுதி செய்துகொண்டார் என்றும் அந்த பெண் கூறினார்.
தற்போது ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அந்த பெண்ணுக்கு அந்த விமான பணிப்பெண் கிறிஸ்துமஸ் மரம் மற்றும் பூக்கள் உட்பட பரிசுகளை வழங்கினார் என்றும் கூறப்படுகிறது.