TamilSaaga

பிழைப்புக்காக சிங்கப்பூர் வந்த ஊழியர்… திடீரென மாரடைப்பு… மொத்த வாழ்க்கையும் படுக்கை… நாடு திரும்ப நன்கொடை கொடுத்த மக்கள்… ஆனால் நிகழ்ந்த சோகம்!

சிங்கப்பூரில் வேலைக்காக வந்த ஊழியர் ஒருவர் திடீரென ஏற்பட்ட பக்கவாதத்தால் நாடு திரும்ப இருந்த நிலையில் உயிரிழந்த நிகழ்வு அனைவரிடத்திலும் சோகத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.

வெளிநாட்டில் வேலை செய்தால் குடும்பத்தின் பொருளாதாரம் முன்னேறி விடும் என்ற நம்பிக்கையில் தான் பலரும் இங்கு வருகின்றனர். சிலருக்கு இங்கு வாழ்க்கை அமோகமாக அமைந்தாலும், சிலருக்கு இங்கு விதி வேறு விதமாக விளையாடி விடுகிறது என்று கூட சொல்லலாம். அந்த நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் சிங்கப்பூரில் கலக்கத்தினை கொடுத்து இருக்கிறது.

வேலைக்காக சிங்கப்பூர் வந்த சீனரான வாங்க் வரும் ஏப்ரல் பாதியில் நாடு திரும்புவதாக இருந்தது. ஆனால் திடீரென அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவரின் இறப்பு செய்தி வெளிவந்ததும் வாங்கின் முன்னாள் முதலாளி, அவரது முன்னாள் ஏஜென்ட் லெனான் பே மற்றும் மனிதவள அமைச்சகத்தின் அதிகாரிகளுடன் சேர்ந்து அவரது இறுதிச் சடங்கை ஏற்பாடு செய்ய முன்வந்தனர்.

இதையும் படிங்க: சிங்கப்பூரின் மிகப்பெரிய சினிமா தியேட்டர்… இலவசமாக சினிமா பார்க்கலாம்… உடனே முந்துங்கள் அனுமதி இலவசம் தான்!

வாங்கின் முன்னாள்-முதலாளி அனைத்து இறுதிச் செலவுகளையும் செலுத்தி இருக்கிறார். மேலும், வாங்கிற்காக முன்னர் திரட்டப்பட்ட நன்கொடையில் இருந்து $70,000 சிங்கப்பூர் டாலர் மீதம் இருக்கும் நிலையில் அது தேவைப்படுபவர்களுக்கு உதவப் பயன்படுத்தப்படும் என்றார்.

ஜனவரி 2022 இறுதியில் வாங் சிங்கப்பூருக்கு வந்தார். மார்ச் 2022ல், அவர் உதவி செஃப் வேலையை விட்டுவிட்டு பாத்திரங்கழுவும் பணிக்கு சென்றார். இருப்பினும், இரண்டு வாரங்களுக்குப் பிறகு, தனிப்பட்ட காரணங்களால் அவர் அந்த வேலையையும் இழந்தார். தொடர்ந்து அடுத்த வேலைக்காக வாங் காத்திருந்த நிலையில், ஏப்ரல் 2022ல் அவரது தங்குமிடத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

வாங் ஆம்புலன்ஸ் மூலம் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு உடனடியாக மூளை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார். இறுதியில், அவரது உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் அவரது மண்டை ஓட்டின் ஒரு பகுதியை அகற்ற வேண்டியிருந்தது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு, வாங் முற்றிலும் முடங்கினார். வாங் மற்றவர்களுடன் பேசும் திறனை இழந்தது மட்டுமல்லாமல், அவர் படுக்கையில் இருந்தார்.

இதையும் படிங்க: சிங்கப்பூர் வந்து கொண்டிருந்த பயணிக்கு நெஞ்சுவலி… 4 மணி நேர மரண போராட்டம்.. உயிரைக் காப்பாற்றிய “சென்னை” – 317 சக பயணிகள் காட்டிய “பேரன்பு” !’

மேலும் அவருக்கு முழுநேர மருத்துவ பராமரிப்பு தேவைப்பட்டது. வாங்கின் அவல நிலையைப் பற்றி அறிந்த முன்னாள் ஏஜென்ட் பே, வாங்கைக் கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 45 வயதான வாங்கின் காண்ட்ராக்ட் முடிந்து விட்டால் கூட அவரின் துரதிர்ஷ்டம் குறித்து கவலையாக இருந்தது. அதனால், வாங்கிற்கு உதவ பே இன்னும் தன்னால் முடிந்தவரை முயற்சி செய்ய விரும்புவதாக கூறினார்.

வாங்கை வீட்டிற்கு அனுப்புவதற்காக பே 22 நாட்களில் S$70,000 திரட்டினார். சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு, வாங் வீட்டிற்கு செல்ல விரும்புவதாக ஒரு காகிதத்தில் எழுதினார். ஆனால், அவரது பயணத்திற்கான செலவு S$60,000க்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வாங்கின் ஆசையை நிறைவேற்ற, பே தனது சார்பாக Give.Asiaல் நிதி திரட்டலைத் தொடங்கி 22 நாட்களில் S$70,000 திரட்டினார். இதை தொடர்ந்து அவரை சீனா அனுப்பும் பணி தொடங்கியது. துரதிர்ஷ்டவசமாக, அவர் வீட்டிற்கு விமானத்தில் ஏறுவதற்கு முன்பே, வாங் நிமோனியா காரணமாக மருத்துவமனையில் மார்ச் 22 அன்று காலமானார்.

இதையும் படிங்க: Exclusive: சிங்கப்பூர் செல்ல Skilled டெஸ்ட்… இன்றைய நிலை என்ன? இன்ஸ்டியூட் சொல்லும் தகவல்… ஒரு நல்ல செய்தி..! ஒரு கெட்ட செய்தி!

அவர் காலமானதைப் பற்றி அறிந்ததும், வாங்கின் முன்னாள் முதலாளி அவரது இறுதிச் சடங்கை ஏற்பாடு செய்து அனைத்து செலவுகளுக்கும் உதவ முடிவு செய்தார். பே-ன் கூற்றுப்படி, வாங்கின் முன்னாள் முதலாளி அனைத்து இறுதிச் செலவுகளுக்கும் பணம் செலுத்த முன்வந்தார். ஏனெனில் வாங்கிற்காக முன்பு திரட்டப்பட்ட நன்கொடைகள் தேவைப்படுபவர்களுக்கு உதவப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் நம்புவதாக தெரிவித்தார்.

தனது மகனின் அகால மரணத்தைப் பற்றி அறிந்த பிறகு, சக்கர நாற்காலியில் இருந்த வாங்கின் தாய் மிகவும் துக்கத்தில் ஆழ்ந்தார். அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. வாங்கின் சகோதரன் தன் தாயைக் கவனித்துக் கொள்ள வேண்டியிருந்ததால், எல்லா நேரங்களிலும் அவள் பக்கத்தில் இருக்க வேண்டியிருந்ததால், அவரால் தன் சகோதரனின் இறுதிச் சடங்கிற்குச் செல்ல முடியவில்லை.

இதனால் வாங்கின் இறுதி பயணம் சிங்கையிலேயே முடிந்தது. வாங்கின் சகோதரர் தொலைபேசி திரையின் மறுபக்கத்திலிருந்து தனது சகோதரனை வழி அனுப்பினார். இந்த நன்கொடைகள் வாங்க்கு இனி உதவியாக இருக்க முடியாது என்றாலும், அந்தத் தொகை அதேபோன்ற மற்றொரு நிதி திரட்டுபவருக்கு மாற்றப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts