TamilSaaga

மீன் சாப்பிட்டு தனது கை கால்களை இழந்த பெண்… அப்படி என்னதான் நச்சுத்தன்மை அந்த மீனில் இருக்கு?

கலிபோர்னியாவை சேர்ந்த ஒரு பெண் மீன் சாப்பிட்டு தனது கை கால்களை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மருத்துவர்கள் கூறியுள்ளதை கவனமாக படிங்க. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் பெண் திலாப்பியா என்ற மீனை வாங்கி சாப்பிட்டுள்ளார். மீனை மாசுபட்ட நிலையில் வாங்கி அதனை சரியாக வேக வைக்காமல் உட்கொண்டுள்ளார். இதன் காரணமாக அந்த பெண்ணிற்கு, மீனில் இருந்து பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளது.

முதலில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளதை கண்டறிந்த மருத்துவர்கள், அதன் பின் இந்த ஆபத்தான பாக்டீரியா பெண்ணின் உடலுக்குள் எப்படி வந்தது என ஆராய்ந்து பார்த்ததில் அவர் சாப்பிட்ட மீனின் மூலம் உடலுக்குள் வந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. மீனை சாப்பிட்ட பெண்ணுக்கு முதலில் சிறிதளவு உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு கை மட்டும் கால்கள் கருப்பாக ஆரம்பித்துள்ளன. அதை தொடர்ந்து அவர் கோமா நிலைக்கு செல்ல, உதடுகளும் கருப்பாக மாறியுள்ளது.

இந்த பாதிப்புக்கு பெயர் செப்சிஸ் என கூறிய மருத்துவர்கள், பாக்டீரியா மூலம் இந்த பாதிப்பு ஏற்படும் எனவும் கூறினர். இதன் மூலம் ஒருவரின் நோய் எதிர்ப்பு மண்டலமே அவர்களுக்கு எதிராக வேலை செய்ய ஆரம்பிப்பதால் அபாயகரமான பாதிப்பு உடலில் ஏற்படும் என எச்சரித்துள்ளனர். இந்த பாக்டீரியாவானது கடல் உணவு மற்றும் கடல் நீரில் காணப்படும் ஒரு கொடிய பாக்டீரியா என மருத்துவர்கள் கூறினர். இத்தகைய பாதிப்பு ஏற்படாமல் தடுக்க கடல் உணவுகளை முறையாக சமைத்து சாப்பிட வேண்டும் என கூறியுள்ளனர். மேலும் எந்த ஒரு மாமிச உணவையும் அரைகுறையாக வேக வைத்து சாப்பிடுவதனால் உடலுக்கு பல பாதிப்பு ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

Related posts