TamilSaaga

தனது இசையாலும், நடிப்பாலும் மக்களை கவர்ந்த விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை… பிரபலங்கள் நேரில் சென்று ஆறுதல்!

தமிழ் திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி தனது நடிப்பின் மூலமும் பல்வேறு தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் ஆவார். இவர் இசை அமைத்த பல்வேறு பாடல்கள் தமிழ் திரையுலகில் பிரபலம் ஆகி உள்ளன. பிச்சைக்காரன் என்ற படத்தில் மூலம் நடிப்பினை வெளிப்படுத்தி நல்ல நடிகர் என்ற பெயரை பெற்றவர் ஆவார்.

இன்று காலை 16 வயது நிரம்பிய இவரது மகள் வீட்டில் தூக்கிட்டு கொண்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12 வது படிக்கும் இவரது மகள் எதற்காக உயிரை மாய்த்துக் கொண்டார் என்று விசாரணையை துவக்கி உள்ளனர். சம்பவத்தை நேரில் பார்த்த பெற்றோர்கள் உடனடியாக தனது பெண்ணை அருகில் உள்ள சிட்டி ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், ஏற்கனவே உயிர் பிரிந்துள்ளதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். பிரபலங்கள் பலரும் விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் தெரிவித்த வண்ணம் உள்ளனர். விஜய் ஆண்டனியின் தந்தையும் ஏற்கனவே தற்கொலை மூலம் உயிரை மாய்த்துக் கொண்டதால், தற்கொலையை பற்றி ஏற்கனவே விஜய் ஆண்டனி பல பேட்டிகளில் எடுத்துரைத்துள்ளார். இந்நிலையில் அவரது மகளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts