சோவியத் யூனியன் அமைப்பின் முக்கிய அங்கமும் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாகவும் திகழ்ந்து வருவது தான் உக்ரைன். ஆதலால் உக்ரைன் நாட்டை தனது ஒரு அங்கமாகவே கருதி வருகின்றது ரஷ்யா. ஆனால் மேற்கத்திய நாகரீகத்தை அதிக அளவில் விரும்பும் உக்ரைன் மக்கள் ரஷ்யாவின் கைப்பிடியில் இருப்பதை விரும்பவில்லை என்றே கூறலாம். பழைய சோவியத் கொள்கைகளை பின்பற்ற விருப்பம் இல்லை என்பதே உக்ரைன் மக்களின் கூற்றாக உள்ளது. இந்நிலையில் தனது ஆதிக்கத்தை மீண்டும் பெற முயற்சித்து வருகின்றது ரஷ்யா. சுருங்கச்சொன்னால் அதுவே இன்றைய போரின் தூண்டுகோலாகவும் உள்ளது.
இன்று காலை 6 மணிக்கு தொலைக்காட்சி வழியாக உக்ரைன் மீதான போரை அறிவித்தது ரஷ்யா. உங்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு வீட்டுக்கு ஓடுவது தான் நல்லது, அப்போது தான் ரத்தக்களரி இன்றி உங்களால் தகிப்பிக்க முடியும் என்று கட்டமாகவே உக்ரைன் ராணுவத்தை பார்த்து கூறியுள்ளார் ரஷ்யா அதிபர்புதின். தற்போது அங்குள்ள நிரலவரத்தை பார்க்கும்போது, லுஹான்ஸ்க் பகுதியில் ஐந்து ரஷ்ய விமானங்கள் மற்றும் ஒரு ரஷ்ய ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் இராணுவம் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதேபோல உக்ரைன் நாட்டின் Airbase தகர்க்கப்பட்டது என்றும் ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
உக்காரன் தலைநகர் Kyiv மற்றும் அதன் இரண்டாவது பெரிய தலைநகரில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும் உக்ரைன் நாட்டின் ராணுவ தளங்களின் மீது மட்டுமே தாங்கள் போர் நடத்தி வருவதாகவும் ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. ரஷ்யா தங்கள் மீது நடத்துவது ஒரு அக்கிரமிப்பு போர் ஆகையால் அதற்கு நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம் என்று உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் தங்கள் மக்கள் பயத்தில் மெட்ரோ நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர் என்றும் உக்ரைன் அதிபர் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் பைடன் உள்பட பல நாட்டு தலைவர்கள் ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் சிங்கப்பூர் மற்றும் இந்திய அரசு சிறப்பு விமானங்களை அங்கு அனுப்பி அங்குள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்டு வருகின்றது. அதேபோல தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும் உக்ரைன் நாட்டில் தமிழர்கள் சிக்கியிருந்தால் அவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.