சிங்கப்பூர் பெண்ணை கல்யாணம் புரிய ஆசைப்பட்டு, கடையில் கொள்ளையடிக்க முயன்ற இங்கிலாந்து மாப்பிள்ளையை போலீசார் கைது செய்துள்ளனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் Louis Crosby. வயது 25. UG மாணவரான Louis, ஆன்லைன் மூலம் பழக்கமான சிங்கப்பூர் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். பிறகு திருமண தேதியும் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து BBC தனது செய்தியில், “Louis Crosby திருமணத்துக்கு முன்பு தன் வாழ்நாள் சேமிப்பு பணம் முழுவதையும் cryptocurrency-ல் முதலீடு செய்திருக்கிறார். ஆனால், அந்த மொத்த பணமும் cryptocurrency மோசடியால் ஏமாற்றப்பட்ட அனைத்தையும் Louis இழந்துவிட்டார்.
எனினும், திருமண நாள் நெருங்க நெருங்க என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்த Louis, கொள்ளையடிப்பது என்று முடிவு செய்திருக்கிறார். இதையடுத்து இங்கிலாந்தின் Sunderland-ல் உள்ள கடை ஒன்றில், முகமூடி, கண்ணாடி அணிந்து கொண்டு நுழைந்த Louis, அங்கிருந்த ஊழியரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
எல்லாவற்றையும் விட ஹைலைட் என்னவெனில், அவர் கையில் துப்பாக்கி ஒன்றும் இருந்திருக்கிறது. எனினும், இதற்கெல்லாம் அஞ்சாத அந்த கடையின் உரிமையாளர் மற்றும் இதர ஊழியர்கள், Louis-ஐ மடக்கி பிடித்து, அவர் கையில் இருந்த துப்பாக்கியையும் கைப்பற்றி, போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
ஊழியர்களிடம் சிக்கிய போது, முதலில் தப்பிக்க முயன்ற Louis பிறகு இந்த கடத்தல் சும்மா ஒரு ‘ஜோக்’ தான் என்று கூறியிருக்கிறார். பிறகு அவர் துப்பாக்கியை சோதித்த போது அது Load செய்யப்படாததும் தெரிய வந்தது.
எனினும், அவரை பரிசோதித்த மனநல மருத்துவர், cryptocurrency-யால் தான் ஏமாற்றப்பட்டதன் வெளிப்பாடு தான் Louis-ன் இந்த துணிகர கொள்ளை முயற்சி என்று தெரிவித்துள்ளார். இதனால், Louis-ன் “அவமானம் மற்றும் வருத்தம்” உண்மையானது என்று நீதிபதி ஜூலி கிளெமிட்சன் ஏற்றுக்கொண்டார். இதனால் முன்னதாக அவருக்கு விதிக்கப்பட்ட 2 வருட சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. அதற்கு பதில், அவரை 12 மாதங்கள் தனிமையில் வைத்து, வாழ்வை எதிர்கொள்ள தேவையான உதவிகள் செய்யப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.