TamilSaaga

குறைவான ஊதியம், மோசமான நிலைமை – பாதிக்கப்படும் வெளிநாட்டு தொழிலாளர்கள்

உலக அளவில் மக்கள் தங்களுடைய குடும்ப கஷ்டத்தை குறைக்கவே வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அப்படி செல்லும்போது பல நேரங்களில் அவர்களுக்கு ஏற்ற வேலையும் மிதமான சம்பளமும் கிடைக்கின்றது. அவர்களும் சிறந்த முறையில் பணியாற்றி தங்கள் குடும்பத்தை காக்கின்றனர். ஆனால் அதே சமயம் சிலர் குறைவான ஊதியமும் மோசமான தொழில் நிலைமைகளில் சிக்கிக்கொள்கின்றனர். இதுபோலத் தான் ஆஸ்திரேலியாவில் பாதிக்கப்படும் சில வெளிநாட்டு தொழிலாளர்களின் வாழ்க்கை உள்ளது. அங்குள்ள பண்ணைகளில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் சிலர் குறைவான ஊதியம் பெற்று மோசமான நிலைமைகளுக்கு இடையில் பணியாற்றி வருவதாகவும், அண்மையில் ஒரு வெளிநாட்டு தொழிலாளர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாகவும் ஆஸ்திரேலிய மேலவையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வாழ்க்கையில் எப்படியு வென்றுவிடுவோம் என்ற பெருங்கனவுகளுடன் சீனாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்ற நபர் தான் Xueliang Wang என்ற பெயர் கொண்ட புலம்பெயர் தொழிலாளி. ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள ஒரு பண்ணையில் பழங்கள் பறிப்பவராக பணியாற்றி வருகிறார். கடுமையான சூழலில் கொசு மற்றும் பூச்சுகளின் கடிகளுக்கு மத்தியில் அவர் தினமும் 11 மணிநேரம் பணியாற்றியுள்ளார். 58 வயதான அவருக்கு மணிக்கு 10 டாலர்கள் சம்பளமாக வழங்கப்படுகிறது.

மேலும் தொழிலாளி Xueliang Wang தன்னுடைய மனைவியுடன் தங்கியிருந்த கண்டெய்னர் வடிவ வீட்டிற்கு வாரம் 75 டாலர்கள் செலுத்தி வேண்டியிருக்கிறது. இந்த இக்கட்டான சூழலில் தான் ஆஸ்திரேலிய நாட்டின் மேலவையின் பணிப் பாதுகாப்பு குழு, ஆஸ்திரேலிய பண்ணைகளில் உள்ள மோசமான நிலைமைகள் குறித்து கேட்டறிந்து. அப்போது, ஒரு மொழிப்பெயர்ப்பாளர் வாயிலாக அந்த குழுவிடம் பேசிய Wang என்ற அந்த தொழிலாளி, “நாங்கள் வெளிநபர்களிடம் இந்த பண்ணையில் அளிக்கப்படும் சம்பளம் மற்றும் இதர விஷயங்கள் குறித்து பேசக்கூடாது என பண்ணை முதலாளி தெரிவித்திருக்கிறார்.” என்று கூறியுள்ளார்.

ஆரம்பத்தில் இந்த பண்ணை வேலைக்கு மணிக்கு 17 டாலர்கள் வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் தொழிலாளி Wang காலை சுமார் 6 மணியிலிருந்து இருள் பொழுது வரை பணியாற்றியும் கூட அவருக்கு அந்த அளவிலான சம்பளம் வழங்கப்படாமல் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகியுள்ளார். இந்த நிலையில் 2013 முதல் 2018 இடையிலான காலகட்டத்தில் ஆசியா, மற்றும் ஐரோப்பா நாடுகளில் இருந்து வேலைக்கு சென்றுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் பெரிய அளவில் உழைப்பு சுரண்டலுக்கு ஆளாகி இருக்கின்றனர் என்று Deakin பல்கலைக்கழக ஆய்வாளர் Elsa Underhill கூறுகின்றார்.

Related posts