TamilSaaga

நம்பி தூங்கிய காதலி.. கண் இமைகளை திறந்து 25 லட்சம் திருடிய “ஜென்டில்மேன்” காதலர் – ‘புதுவகை திருட்டு’ என வங்கி அதிகாரிகள் வியப்பு!

சீனாவின் நானிங் பகுதியில், 28 வயது நிரம்பிய ஹாங் என்பவர் தன்னுடைய முன்னாள் காதலியை சந்தித்து, தான் அவரிடமிருந்து கடனாக பெற்ற பணத்தை (S$12873) திரும்ப தருவதாக கூறியுள்ளார்.

இதனை நம்பி அவரை சந்திக்க அனுமதித்துள்ளார் டாங் என்ற குடும்பப் பெயர் கொண்ட அந்தப் பெண். இந்த சந்திப்பின்போது டாங்கிற்கு உடல் நிலை சரியில்லை. இதனை அறிந்து கொண்ட ஹாங், இவருக்கு சளி மருந்து மற்றும் உணவையும் தயாரித்து கொடுத்துள்ளார்.

உணவையும் மருந்தையும் உண்டபிறகு டாங் உறங்கிவிட்டார். ஹாங் அவரது கை ரேகை கடவுச்சொல்லை வைத்து அவரது தொலைபேசியின் கடவுச்சொல்லை விலக்கியிருக்கிறார். மேலும் உறங்கிக்கொண்டிருந்த டாங்கின் கண்ணிமைகளை உயர்த்தி கருவிழி கடவுச்சொல்லை பயன்படுத்தி அவரது ஆன்லைன் வங்கி கணக்குகளை கையாடல் செய்துள்ளார்.

மேலும் படிக்க – “சிங்கப்பூரில் சிறிய வணிகர்களுக்கு கைகொடுக்கும் E-Payments” – அமைச்சர் Low Yen Ling வெளியிட்ட புள்ளிவிவரம்

மேலும் அவருடைய வைப்பு கணக்கு ஆகியவற்றை தனது வங்கி கணக்கிற்கு நேரடியாக செல்லும் வகையில் பல வகையான மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளார்.

மறுநாள் டாங், தனது வங்கி கணக்கில் பல மாற்றங்கள் இருப்பதை கவனித்து, ஹாங்கை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். தொடர்பு கொள்ள முடியாததால் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

காவல்துறையினர் ஹாங்கை ஏப்ரல் 2021ம் மாதம் பிடித்துள்ளனர். இவருக்கு மூன்றரை வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் S$4291 அபராதத் தொகையும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க – “சிங்கப்பூர் சிட்டி ஹால் MRTயிலிருந்து, Funan-க்கு நிலத்தடி பாதசாரி இணைப்பு பாதை” – இந்த டிசம்பரில் திறக்கப்படும்

‘அலிப்பே’ என்ற இணையதள வங்கி கணக்கிலிருந்து பணம் கையாடல் செய்யப்பட்ட இந்த சம்பவத்தை குறித்து அந்த நிறுவனத்தினர் கூறுகையில், பல்வேறு வகையான பாதுகாப்பு கடவுச்சொற்களை தாண்டியே பணப்பரிமாற்றம் செய்யப்படுவதாகவும், இந்த திருட்டு ஒரு வித்தியாசமான, புது வகையான திருட்டாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் வாடிக்கையாளர்கள் பல்வேறு வகையான பாதுகாப்பு கடவுச்சொற்களை அமைத்துக் கொள்ள வேண்டுமென்றும் அதன் மூலம் தங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts