ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்த இரண்டு வயது சிறுமியை சாலையோரமாக சென்ற ஒரு காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பையும் உலக மக்களின் பாராட்டை பெற்றுள்ளது.
சம்பவத்தன்று ஒரு நபர் சாலையோரமாக தெருவில் நடந்து சென்றபோது அருகில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் 5வது மாடியில் ஒரு கைக்குழந்தை ஜன்னல் வழியாக எட்டிப்பார்ப்பதை கண்டு மிகவும் திடுக்கிட்டுள்ளார்.
உடனே அருகில் ஓடிவந்து மேலிருந்து கீழே தவறி விழுந்த குழந்தையை லாவகமாக தாங்கிப்பிடித்துள்ளார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியாங் ஜூலை 22 அன்று ட்விட்டரில் பதிவேற்றினார்.
இருப்பினும், வெளியான வீடியோ காட்சிகள் சம்பவத்தின் முழு விவரத்தையும் வழங்கவில்லை என்றாலும் ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்த குழந்தையை அந்த நபர் காப்பாற்றியது பலரின் பாராட்டை பெற்று. வருகின்றது. அந்த நபருக்கு அருகில் இருந்த பெண்ணும் அந்த குழந்தையை காப்பாற்ற உதவிய கட்சிகளும் தற்போது வைரலாகி வருகின்றது.
உண்மையில் சூப்பர் ஹீரோக்கள் படத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் இருக்கத்தான் செய்கின்றார்கள் என்பதை நிரூபித்துள்ளார் இந்த அதிசய மனிதர்.