TamilSaaga

2 மாதமா சம்பளமும் வரல.. 3 மாதமா சாப்பிடவும் பணம் இல்ல – விரக்தியில் காணாமல் போன 22 வயது இளம் பெண் – கண்டுபிடித்தால் “17 லட்சம்” பரிசு

நீங்கள் மேலே இந்த புகைப்படத்தில் பார்க்கும் பெண்ணின் பெயர் Chia Min Yong. மலேசியாவைச் சேர்ந்தவர். இன்சூரன்ஸ் ஏஜெண்ட்டாக பணிபுரிந்து வந்த Chia கடந்த ஏப்ரல் 5ம் தேதி முதல் காணவில்லை.

இந்நிலையில், இந்த இளம் பெண்ணைக் கண்டுபிடிக்க உதவுவோருக்கு பழம்பெரும் getai பாடகரும் லைவ்ஸ்ட்ரீம் தொகுப்பாளருமான வாங் லீ பரிசுத் தொகையை அறிவித்துள்ளார்.

அப்பெண்ணை கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு அவர் முதலில் RM10,000 (S$3,223) வெகுமதியாக வழங்குவதாக அறிவித்தார். ஆனால் பின்னர் அப்பெண்ணுடைய தந்தையின் முதலாளி RM100,000 (S$32,286) வழங்கியதை அறிந்ததும், வெகுமதியை RM50,000 (S$16,213) ஆக உயர்த்தியுள்ளார்.

இதுகுறித்து பேசிய வாங் லீ, தனக்கும் ஒரு மகள் இருப்பதால் அப்பெண்ணுடைய பெற்றோரின் கவலையை தன்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவள் காணாமல் போனதில் இருந்து அவர்கள் “தினமும் அழுகிறார்கள்” என்றும், காணாமல் போன பெண்ணின் தாய் பல நாட்களாக சாப்பிடவில்லை என்றும் கூறினார்.

மேலும் படிக்க – 10 வருடங்களுக்கு முன்பே “மரணத்தை” வென்ற பெண்.. மீண்டும் சோதிக்கும் கடவுள்.. கையிலோ 18 மாத குழந்தை – முதல் ஆளாக முன்வந்த அமைச்சர் சண்முகம்

Chia Min தந்தை சிங்கப்பூரில் தனது வேலையை விட்டுவிட்டு, மகளை கண்டுபிடிக்க மலேசியா சென்று முயற்சித்து பார்த்தார். ஆனால், எந்த பலனும் கிடைக்கவில்லை.

அப்பெண்ணுக்கு பணப் பிரச்சனைகள் இருந்தால், சிங்கப்பூரில் உதவியாளராக அவளுக்கு வேலை தருவதாகவும் வாங் கூறினார். அப்பெண் சிங்கப்பூரில் வேலை செய்ய விரும்பவில்லை என்றாலும், பினாங்கைத் தளமாகக் கொண்ட தனது நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவைப் பதவியை அவருக்கு வழங்க தயார் என்றும் வாங் லீ கூறியுள்ளார்.

முன்னதாக, கடந்த ஏப். 5ம் தேதி இரவு 7 மணியளவில், Chia Min தனது அம்மாவுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் மெசேஜில், தான் வேலை மிக மோசமான நிலையில் இருப்பதாகவும், தனக்கு நிதிச் சிக்கல்கள் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும், கடந்த மூன்று மாதங்களாக தன்னிடம் உணவுக்கு கூட பணம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க – 3 மாத கர்ப்பிணி.. எதிர்கால கனவோடு வேலைக்கு புறப்பட்ட கணவர் – சிங்கை Gambas Ave விபத்தில் பல அடி தூக்கி வீசப்பட்ட Bike – மாலையில் பிணமாக திரும்பிய சோகம்!

இதுகுறித்து Chia-வின் ஆண் நண்பர் தெரிவிக்கையில், “அவர் சமீபகாலமாக வேலை காரணமாக அதிக மன அழுத்தத்தில் இருந்தார், கடந்த இரண்டு மாதங்களாக அவருக்கு சம்பளம் கிடைக்கவில்லை” என்றார்.

இப்போது ஒட்டுமொத்த குடும்பமும், மலேசியா, சிங்கப்பூர் என்று Chia-ஐ தேடி வருகின்றனர். Chia-வின் தந்தை வேலைப்பார்க்கும் நிறுவனத்தின் முதலாளி, அப்பெண்ணை கண்டுபிடித்து தருவோருக்கு 17 லட்சம் பணத்தொகையை அறிவித்திருக்கிறார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts