மலேசியாவில் உள்ள கழிவு மேலாண்மை நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு தொழிலாளி, கடந்த பிப்ரவரி 8 அன்று, போர்வை மற்றும் பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்ட முட்டையில் கிடந்தது மனித உடலாக இருக்கலாம் என்று சந்தேகித்தால், காவல்துறையை உதவிக்கு அழைத்ததாக தி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது. மலேசியாவின் ஷா ஆலம் பகுதிக்கு, சிலாங்கூர் காவல் உதவி ஆணையர் பஹாருதின் மத் தாயிப், மேலும் விசாரணைகளை நடத்த தடயவியல் குழு அனுப்பப்பட்டுள்ளது என்று கூறினார்.
இந்த சம்பவம் ஒரு மோட்டார் சைக்கிள் கடை ஒன்றின் பின்புறத்தில் இடம்பெற்றுள்ளதாக தி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், அனைவரும் பயந்ததுபோல அந்த இடத்தில் மீட்கப்பட்டது ஒரு மனித உடல் அல்ல. அதற்கு பதிலாக, அந்த மரம பைக்குள் இருந்தது ஒரு பெண்ணைப் போன்ற வடிவிலான மெழுகு பொம்மை என்பது அதற்கு பிறகு தான் தெரியவந்தது.
ட்விட்டர் பயனர் ஒருவர் அந்த பகுதியில் நடந்த காட்சிகளை சில புகைப்படங்களாக பதிவேற்றியுள்ளார். அந்த ட்வீட் போடப்பட்டுள்ள நேரத்தில் 42,000க்கும் மேற்பட்ட லைக்களையும் 20,000 ரீட்வீட்களையும் பெற்றுள்ளது. அந்த பயனர் பதிவேற்றிய புகைப்படங்கள் ஒன்றில், பல அதிகாரிகள் அந்த பகுதியில் விசாரணை நடத்துவது போலவும். சந்தேகத்திற்குரிய அந்த இடம் பொதுமக்கள் நெருங்காதவாறு சுற்றி வளைக்கப்பட்டதாகக் காணப்பட்டது. பல போலீஸ் கார்கள் மற்றும் ஒரு போலீஸ் வேனையும் புகைப்படத்தில் காணலாம்.
போலீசை அழைத்த தொழிலாளி விவரித்ததைப் போலவே, ஒரு போர்வை மற்றும் தெளிவான பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட மனிதனைப் போன்ற உருவம்கொண்ட மெழுகு பொம்மை அதில் இருந்தது. அந்த ட்விட்டெர் பயனர் இறுதியில் பிரிக்கப்பட்ட பேக்கேஜின் புகைப்படத்தையும் பதிவேற்றியுள்ளார், அதில் ஒரு பெண்ணின் வடிவத்தில் மெழுகு பொம்மை உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை தவறான வழியில் சித்தரிக்க வேண்டாம் என்று காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியதாக ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.
“இந்த வழக்கில் எந்த குற்றமும் நடைபெறவில்லை, என நாங்கள் வகைப்படுத்தியுள்ளோம், ஏனெனில் இந்த வழக்கில் குற்றவியல் கூறு எதுவும் இல்லை” என்று பஹாருதீன் கூறினார். மேலும் “சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட வழக்கு தொடர்பான படங்களை கொண்டு எதையும் ஊகிக்க வேண்டாம்” என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.