நமது Tamil Saaga Singapore தளத்துக்கு ஒரு மிக முக்கிய செய்தி ஒன்று கிடைத்துள்ளது.
அதாவது, தமிழகத்தில் உள்ள கடலூர் மாவட்டம் கீழக்குறிச்சியை சேர்ந்த இரகுபதி த/பெ வேலாயுதம் குவைத் நாட்டில் வேலைக்கு சென்றிருக்கிறார். ஆனால், அங்கு கொத்தடிமையாக நடத்தப்படும் இரகுபதி நான்கு நாட்களாக உணவு கூட இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார் என்ற தகவல் நமக்கு கிடைத்துள்ளது.
இந்த செய்தியை படிக்கும் வாசகர்களில் யாருக்காவது இரகுபதி குறித்த தகவல் தெரிந்தாலோ அல்லது அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் தெரிந்தாலோ +91 8269 418 418 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
சிங்கப்பூரில் வசிக்கும் உங்களது உறவினர்கள் யாரேனும் குவைத்தில் இருந்தால், அவர்களுக்கு இந்த செய்தியை பகிருமாறும் கேட்டுக் கொள்கிறோம். எந்த நாட்டில் இருந்தாலும், நம் கைகளில் சமூக தளம் எனும் மிகப்பெரும் ஆயுதம் உள்ளது. அதன் மூலம், நிச்சயம் நாம் ஒருங்கிணைந்து இவரை கண்டுபிடிக்க முடியும்.
இரகுபதியை மீட்பதில் ‘தமிழ் சாகா சிங்கப்பூர்’ தளம் உறுதியாக உள்ளது. எனவே, அவரைப்பற்றிய விவரம் தெரிந்தால், தயவுகூர்ந்து தகவல் அளிக்குமாறு வேண்டுகிறோம்.
ஏற்கனவே, இதுபோன்று வெளிநாடு வந்து சிக்கி, பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து, அவர்களை அடையாளம் கண்டு, நமது ‘தமிழ் சாகா சிங்கப்பூர்’ சார்பாக அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டுச் சென்று மீட்டுளோம். எனவே, மீண்டும் ஒருமுறை நாம் அனைவரும் கைக்கோர்த்து இந்த நபரை மீட்க வேண்டும்.
இப்போதைக்கு அவர் பெயர் ரகுபதி என்பதும், அவரது தந்தை பெயர் வேலாயுதம் என்பதும், அவரது ஊர் கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழக்குறிச்சி என்பதும் மட்டும் தெரிகிறது. அவர் தற்போது குவைத்தில் தான் உள்ளார். இதர விவரங்கள் கிடைக்கவில்லை. ஆகவே, அவரை கண்டறிய உதவும்படி கேட்டுக் கொள்கிறோம்.