TamilSaaga

Video Call-ல் கல்யாணம்.. செல்போனுக்கு தாலி கட்டிய வெளிநாட்டு ஊழியர்.. 10 லட்ச ரூபாய் கல்யாணத்தை லேப்டாப்பில் முடித்த குடும்பம்!!

திருவிழா, திருமணம், துக்க நிகழ்வு, நிம்மதியாக ஒரு சுற்றுலா பயணம் என்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நாம் பல அடிப்படை விஷங்களை கூட நிம்மதியாக பங்கேற்க முடியாமல் நம்மை முடக்கிவிட்டது இந்த பெருந்தொற்று.

பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றில் பதிவான தொற்று நோய்கள் இரண்டு மூன்று ஆண்டுகள் வரை நீடித்து நின்றுள்ள நிலையில் இந்த அறிவியல் யுகத்திலும் கூட ஒரு தொற்று நோய் பல பரிமாணங்கள் எடுத்து நம்மை ஆட்டிப்படைக்கிறது. முகக்கவசம் இன்றி மனித முகங்களை நேரில் கண்டு மணிக்கணக்கில் பேசி ஆண்டுகள் ஆயிற்று இரண்டு.

இருப்பினும் பல மருத்துவர்களின் கடின உழைப்பு, முயற்சி மற்றும் தியாகத்தால் கிடைத்துள்ளது தடுப்பூசி. தற்போதைக்கு இது ஒன்றே நமக்கு கிடைத்திருக்கும் இந்த தொற்றுக்கு எதிரான ஆயுதம். இந்த சூழலில் ஆன்லைன் கல்வி, ஆன்லைன் வேலை என்று துவங்கி ஆன்லைன் நிச்சயதார்த்தம் வரை வந்துவிட்டது.

சில இடங்களில் பெற்றோர் போன்ற நெருங்கி சொந்தங்கள் கூட கலந்துகொள்ளமுடியாமல் இணைய வழியில் திருமணம் நடப்பதை பார்த்து செல்போனிலும் லேப்டாப்பிலும் ஆசீர்வாதம் அளிக்கும் காலமும் வந்துவிட்டது. ஆனால் இதற்கெல்லாம் ஒரு படி மேல சென்று இணைய வழியில் ஒரு திருமணமே நடந்து முடிந்துள்ளது இப்பொது. ஆமாங்க மணமகன் ஒரு இடத்தில் மணமகள் ஒரு இடத்தில் இருக்க அவர்களுக்கு இணைய வழியில் நடந்துள்ளது திருமணம்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் எட்டுத்திக்கும் ஒலித்த ‘சிங்கை நாடு’ பாடல்… சிங்கை பிரதமரையே வியக்க வைத்த தமிழன்! – ஏ.ஆர்.ரஹ்மான் தரத்துக்கு சற்றும் குறையாத “சொக்கத் தங்கம்”!

இந்த அதிசய திருமணத்தை நடத்திக்காட்டிய மாப்பிள்ளையின் பெயர் நிர்மல். திருவனந்தபுரத்தை சேர்ந்த நிர்மல் நியூஸிலாந்து நாட்டில் என்ஜினீயராக பணியாற்றி வருகின்றார். தொற்று தொடங்கிய காலத்தில் தான் இவருக்கும் கீர்த்தனா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இருமனம் கூடிவிட்டால் பின் திருமணம் தானே.

ஆனால், பெருந்தொற்று இந்த ஜோடியின் திருமணத்தை தள்ளிக் கொண்டே சென்றது. இல்லறத்தில் இணைய காத்திருந்த தம்பதிக்கு தொற்று பெரும் தலைவலியாய் அமைந்தது. இதனால் நியூஸிலாந்து நாட்டில் இருந்து திரும்ப முடியாத மணமகனும், காத்திருந்த மணமகளும் கடுப்பான நிலையில் இருவீட்டார் சேர்ந்து எடுத்த முடிவு தான் ஆன்லைன் கல்யாணம்.

என்ஜினீயர் நிர்மல் ஆசிரியை கீர்த்தனாவுக்கு ஆன்லைன் திருமணம் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இரு குடும்பத்தினரும் வழக்கறிஞரை சந்தித்து சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் அவர்களது திருமணத்தை பதிவு செய் முடிவு செய்தனர். இறுதியில் இதற்கு அனுமதியும் கிடைத்தது, இறுதியில் Register முன் கல்யாணம் நடந்தது. மாப்பிளை ஆன்லைன் மூலம் நிர்மல் செல்போனுக்கு தாலி க்கட்ட அதை ஏற்றுக்கொண்டார் கீர்த்தனா.

சட்டப்பூர்வமாக திருமணம் நிறைவேறிய நிலையில், நிர்மல் பிறகு ஊர் திரும்பியதும் இருவரும் இல்லற வாழ்க்கையில் இணைந்தனர். இந்த அற்புத ஜோடிக்கு நமது வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts