இன்று உலகமே வியந்து பார்க்கும் மனிதர்களில் ஒருவர் தான் எலான் மஸ்க், இன்றைய தேதியில் இவரை தெரியாதவர்களே இல்லை என்றே கூறலாம். ஆனால் கடந்த சில நாட்களாக எலான் மஸ்க் தந்தை ஏரோல் மஸ்க் அளித்த பேட்டி ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த மஸ்க்கின் தந்தை “நாம் வாழ்வதே இனப்பெருக்கம் செய்யத் தான்” என்று கூறியுள்ளார். மேலும் தனது இரண்டாவது மனைவி ஹைடியின் பெண்ணும் தனது வளர்ப்பு மகளுமான ஜனாவோடு கடந்த சில ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
இதில் உச்சக்கட்டம் என்னவென்றால் ஏற்கனவே தனக்கு தனது வளர்ப்பு மகளான ஜனாவிற்கும் ஒரு குழந்தை உள்ளது என்றும் தற்போது இரண்டாவது குழந்தை பிறக்கப்போகிறது என்றும் ஏரோல் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
ஏரோல் மஸ்க் மற்றும் அவரது முதல் மனைவி மே மஸ்க் ஆகியோருக்கு பிறந்தவர்கள் தான எலான் மஸ்க், கிம்பல் மஸ்க் மற்றும் டாஸ்கா மஸ்க் ஆகியோர். அதன் பிறகு 9 ஆண்டுகள் கழித்து இருவரும் பிரிந்த நிலையில் தான் ஹைடியை ஏரோல் திருமணம் செய்தார்.
ஏரோல் மற்றும் ஹைடிக்கு ஆஷா மற்றும் அலெக்ஸாண்ட்ரா என்ற இரண்டு மகள்கள் உண்டு, இந்நிலையில் தான் ஹைடிக்கும் அவர் முன்னாள் கணவருக்கும் பிறந்த ஜனாவை ஏரோல் திருமணம் செய்து ரகசியமாக வாழ்ந்து வந்துள்ளார்.
தற்போது இரண்டு ஆண்டு காலம் தனது வளர்ப்பு மகளோடு வாழ்ந்து வந்த நிலையில் அந்த உறவை பற்றி வெளியில் கூறியுள்ளார். ஆனால் அவருடைய இந்த செயல் எலான் மஸ்கிற்கு பிடிக்கவில்லை என்றும் ஜனாவை அவர்கள் சகோதிரியாக பாவிக்கிறார்கள் என்றும் ஏரோல் கூறியுள்ளார். உண்மையில் தந்தையின் இந்த செயலால் மிகுந்த கோவத்தில் எலான் இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றது.