கும்மென்ற இருட்டு சூழ்ந்த நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற கார் ஒன்று நடுரோட்டில் குவிந்திருந்த மாடுகள் மீது மோதிய Dash Cam காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. கடந்த ஏப்ரல் 20ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவத்தின் காட்சிகளை பேஸ்புக் பயனர் பெர்னார்ட் பாங் தனது இணையத்தில் பதிவேற்றியுள்ளார். நள்ளிரவு 1:30 மணியளவில் காரின் Dash Camல் பதிவான அந்த வீடியோவில், தெரு விளக்குகள் இல்லாத நெடுஞ்சாலையில் ஓட்டுநர் பயணிப்பதைக் காணமுடிகிறது.
கார் ஓட்டுநர் மணிக்கு 133 கிமீ வேகத்தில் இருந்து 137 கிமீ வேகத்தில் அதிவேகமாகச் சென்று இடதுபுறத்தில் செல்லும் ஒரு காரை முந்திச் செல்வதையும் நம்மால் காணமுடிகிறது. நொடிப்பொழுதில் எல்லாமே மாறிவிடும் என்று கூறுவதைப்போல எல்லாம் ஒருநிமிடத்தில் மாறிவிட்டது.
கும்மென்ற இருட்டான அந்த மலேசிய நெடுஞ்சாலையில் அந்த கார் வேகமாக செல்ல செல்ல சட்டென்று எதிரே ஒரு மாடுகளின் கூட்டம் நிற்பதை பார்த்துள்ளார். ஆனால் 139 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் காரை சட்டென்று நிறுத்துவது எளிதல்ல.