பாலூட்டி, சீராட்டி அந்த சிறிய தொண்டை குழாயில் பாலை பீய்ச்சியடித்து பசியாற்றிய ஒரே பொக்கிஷம் தாயின் மார்பகம் தான். அன்று குழந்தையாக இருந்த போது உணவுக் களஞ்சியமாக இருந்த மார்பகம், இன்று வளர்ந்த பிறகு கவர்ச்சியாக மட்டுமே பார்க்கும் விந்தை குணமாக மாறுகிறது. இப்படியொரு மார்பில் தான் நாம் பசியாற்றினோம் என்ற உணர்வு ஏற்படாமல், காம உணர்வு மேலோங்குவது புரியாத புதிர் தான்.
குறிப்பாக, பெரிய மார்பகம் கொண்ட இளம் பெண்கள் படும் பாடு சொல்லி மாளாது. உறவினர்கள், நண்பர்கள், என்று பாரபட்சம் இல்லாமல் ஏதாவது ஒரு இடத்திலாவது சங்கடத்தை அனுபவித்து இருப்பார்கள். பெரிய மார்பகம் உள்ள பெண்களை பார்த்தால், ‘பால் டிப்போ’ என்று மோசமாக வர்ணித்த காலம் 90-களில் இருந்தது. இப்போது நிலைமை அதைவிட மோசமாக உள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள ஒரு பெண் தனது பெரிய மார்பகங்களால் அவமானங்களுக்கும், கேலி, கிண்டலுக்கும் ஆளாகியுள்ளார்.
இங்கிலாந்தின் நார்தாம்ப்டன்ஷையர் நகரில் வசித்து வருபவர் கார்ட்லி ஸ்மார்ட். வயது 21. அங்குள்ள உணவு விடுதி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

கார்ட்லியின் மார்பக அளவு 36 அங்குலம். இது அவரது வயது, உயரம் மற்றும் எடையுடன் ஒப்பிடுகையில் மிகவும் பெரியது. இப்படி பெரிய மார்பகங்கள் கொண்டிருந்ததால், தனக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும் சில நேரங்களில் முதுகுத் தண்டில் வலி ஏற்படுவதாகவும் கார்ட்லி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
பல இடங்களில் உணவுகளை பரிமாறும் போது, அவரது மார்பகங்கள் அடிபடுவதை பலரும் வெளிப்படையாகவே கிண்டல் செய்துள்ளார்களாம். “உன் மார்பகம் பட்டு கண்ணாடி உடைந்துவிடப் போகிறது” என சக பணியாளர்களே கேலி செய்த போது தான் மிகவும் அவமானப்பட்டதாக கார்ட்லி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர், “என்னுடைய மார்பகங்களின் எடை 9 கிலோ. இதனால் நான் பல கேலி, கிண்டல்களை சந்தித்துள்ளேன். இப்படித்தான் என்று இல்லாமல் அவமானப்பட்டுள்ளேன். மார்பகங்கள் பெரிதாக இருப்பதால், பிரா அணியும் போதும் காயங்கள் ஏற்படுகிறது. மார்பகங்களுக்கு கீழே ஏற்பட்டுள்ள காயங்களை பார்க்கும்போது சிக்கன் குனியா தாக்கியதைப்போல உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதனால் தன்னுடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மார்பகங்களை சிறிதாக்கும் அறுவை சிகிச்சை செய்துகொள்ள கார்ட்லி முடிவெடுத்திருக்கிறார். ஆனால் அதிலும் ஒரு பேரிடியாக, இவருடைய BMI (Body mass index) 25க்கும் குறைவாக இருந்ததால் கார்ட்லியின் அறுவை சிகிச்சை கோரிக்கையை பிரிட்டன் தேசிய சுகாதார சேவை நிராகரித்துவிட்டது.
ஆனாலும், “Crowd Funding” எனப்படும் மக்களிடம் நேரடியாக பண உதவி பெற்று மார்பக அறுவை சிகிச்சையை மேற்கொள்ள நிதி திரட்டி வருகிறார். தனது பெரிய மார்பகங்களை பார்த்து கிண்டல் செய்பவர்களுக்கு, என்றும் எனது வலியும், அவமானமும் புரியாது. புரிந்து கொள்ளவும் முடியாது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.