TamilSaaga

“உயிரோடு வருவேனான்னு தெரியல” : மலேசியாவில் போதை பொருள் கும்பலிடம் விற்க்கப்பட்ட சிவகங்கை இளைஞர் – வீடியோ உள்ளே

பல காலமாக ஒரு செயல் தொடர்கதையாகவே உள்ளது. அது தான் தவறான ஏஜெண்டுகளை நம்பி வெளிநாட்டிற்கு சென்று பெரும் இன்னலுக்கு ஆளாகும் பல தமிழர்களின் வாழ்க்கை. தற்போது சிவகங்கை அருகே உள்ள முத்து பட்டிபுதூர் என்ற கிராமத்தை சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு இந்த கொடூரம் நடந்துள்ளது. வீட்டின் ஏழ்மை நிலையை போக்க வெளிநாட்டுக்கு செல்ல முடிவு செய்த கண்ணன் என்பவற்றின் மகன் ஆனந்த் (20) மலேசியா சென்று வேலை செய்ய முடிவு செய்துள்ளார்.

இதற்காக காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரை என்ற ஊரை சேர்ந்த வெளிநாட்டிற்கு அனுப்பும் ஏஜன்ட் ஒருவரான சரவணன் என்பவரை அணுகியுள்ளார். அவர் மூலம் மலேசியாவில் கோவில் பணிக்கு செல்ல சுமார் 80,000 ரூபாய் அளித்து வேலையை பெற்றுள்ளார். மலேசியா புறப்பட்ட மகனை கண்டு தாயும் தந்தையும் தங்களுடைய வாழக்கைதரமும் தரம் உயர்ந்து ஏழ்மை மறையப்போகுறது என்று மகிழ்ச்சியோடு இருந்த நிலையில் இடியென வந்திறங்கியது ஒரு செய்தி.

மலேசியாவில் கோவில் வேளைக்கு சென்ற தங்களது மகன் ஏமாற்றப்பட்டு, அங்குள்ள ஒரு போதைப்பொருள் கும்பலிடம் ஆனந்த் விற்கப்பட்டதாக கிடைத்த செய்தியை கேட்டு பெற்றோர் மனமுடைந்தார். கோவில் வேலை கிடைக்கலாம் ஏமாற்றப்பட்ட ஆனந்த் தாய் தந்தையருக்கு அனுப்பிய whatsapp தகவலின் மூலம், அவர்கள் காவல்துறையை அணுகினர்கள். இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட தமிழக காவல்துறை மலேசிய போலீசுக்கு இந்த தகவலை தெரியப்படுத்த ஆனந்தை மீட்டு அங்குள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.

இந்நிலையில் தற்போது தனது மகனை மீட்டு தாயகம் அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆனந்தின் தாயார், மாவட்ட ஆட்சியர் திரு .மதுசூதன ரெட்டியிடம் கண்ணீர் மல்க மனு கொடுத்துள்ளார். மகனை பிரிந்த அந்த தாயின் விடுக்கும் வீடியோ காண்போரை கண்கலங்க செய்துள்ளது. ஆனந்தை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts