TamilSaaga

“யாரு கண்ணு பட்டுச்சோ தெரியல.. உனக்கு பாரமா இல்லாம நாங்க போறோம்..” விபரீத முடிவை எடுத்த மனைவி – தலையில் அடித்துக்கொண்டு கதறும் கணவன்!

இந்த டிஜிட்டல் உலகில் நோய்களின் தாக்கம் அதிகரிக்கும் அதே நேரத்தில் அவற்றுக்கான மருந்துகளும் தொடர்ச்சியாக கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அறியாமை காரணமாக ஒரு பெண் செய்த தவறு இன்று அந்த குடும்பத்தையே நிலைகுலைய வைத்துள்ளது.

அண்டை நாடான இந்தியாவின் தமிழகத்தில் தான் இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. ராமநாதபுரம் என்ற மாவட்டம் அருகில் உள்ளது தான் நயினார்கோவில் என்ற ஊர். அங்கு பல்லவராயனேந்தல் என்ற சிறிய கிராமத்தை சேர்ந்தவர் தான் முனீஸ்வரன்.

அந்த பகுதியிலேயே ஒரு பேக்கரியில் டீ மாஸ்டர் வேலை செய்யும் அவருக்கும் திவ்யா என்ற பெண்ணுக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து நடத்திய திருமணம் அது, ஆனால் காதலித்து திருமணம் செய்தவர்களை போல இருவரிடையே அவ்வளவு அரவணைப்பு.

இவர்களுடைய காதலுக்கு சாட்சியாக பிறந்தது தான் தர்ஷினி என்ற அழகிய தேவதை, கணவனுக்கு தேவையான அனைத்தையும் மனைவி செய்ய, மனைவியையும் தனது குட்டி தேவதையையும் மிகுந்த பாசத்துடன் கவனித்து வந்துள்ளார் அவர்.

வாழக்கை சீராக சென்றுகொண்டிருந்த நிலையில் ஒரு நாள் 8 மாத குழந்தையாக இருந்த தர்ஷினிக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. பிள்ளையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றபோது தான் 8 மாத குழந்தை தர்ஷினிக்கு வலிப்பு நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

முனீஸ்வரன் எப்படியும் குழந்தையை குணமாகிவிடலாம் என்று திவ்யாவிடம் கூற அவர் மனம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பல நாட்கள் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்த திவ்யா நேற்று முன்தினம் ஒரு விபரீத முடிவை எடுத்துள்ளார்.

சிங்கப்பூர்.. ஏப்ரல் மாதத்தில் மட்டும் 10 பணியிட இறப்புகள்.. உடனே “STO”வை அமல்படுத்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்திய MOM – STO என்றால் என்ன?

முனீஸ்வரன் வழக்கம்போல வேலைக்கு சென்றதும், தங்கள் வீட்டிற்கு பின்னால் இருக்கும் தோட்டத்திற்கு சென்று முதலில் பூச்சி மருந்தை கொடுத்து தர்ஷினியை கொன்றுவிட்டு திவ்யா தான் கட்டியிருந்த புடவையால் தூக்கிட்டு தானும் மாண்டுள்ளார். உணவருந்த வீட்டிற்கு வந்த முனீஸ்வரன் இந்த சம்பவத்தை பார்த்து கூச்சலிட ஊர் மக்கள் அங்கு கூடியுள்ளனர்.

உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கும் செய்தி அளிக்கப்பட்டது, அங்கு வந்த போலீசார் இரு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார்.

அப்போது குழந்தை தர்ஷினி உடல் அருகே இருந்த ஒரு கடிதத்தில், எங்களை மன்னித்துவிடுடா முனீஷ்.. நாங்கள் உனக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. யார் கண் பட்டதோ தெரியவில்லை, நம் வாழ்க்கை இவ்வளவு சீக்கிரத்தில் முடிந்து விட்டது.

உனக்கு சொந்தமான பொருளை நான் (குழந்தை) எடுத்து செல்கிறேன், எனக்கு சொந்தமானை பொருளை உனக்காக விட்டு செல்கிறேன். என் தாலி எப்போதும் உன் இடுப்பில் இருக்கட்டும். முனீஷ் i love you da என்று கூறி அந்த கடிதத்தில் எழுதியிருந்தார்.

சிங்கப்பூரில் இதுவே முதல் முறை.. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக லிட்டில் இந்தியாவில் உதயமாகும் “புதிய சேவை” – “தமிழ் மொழியிலும் சேவை உண்டு”!

இதை கண்ட முனீஸ்வரன் கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது, இன்றைய காலத்தில் மருத்துவம் எங்கோ சென்றுகொண்டிருக்கும் வேளையில் வலிப்பு நோயால் குழந்தை அவதி படுகிறது என்று எண்ணி ஒரு தாய் இறந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எந்த ஒரு விஷயத்திற்கும் தற்கொலை தீர்வாகாது என்பதை புரிந்துகொண்ட அனைத்தையும் எதிர்த்து போராடும் குணம் நம்மிடையே அதிகரிக்க வேண்டும் என்பதை யாரும் மறக்க கூடாது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts