TamilSaaga

குடும்பத்தை காக்க வெளிநாடு சென்று திரும்பிய நபர் : நடுவானில் நிகழ்ந்த சோகம் – கதறி அழுத குடும்பம்

சொந்தங்களை பிரிந்து குடும்ப நன்மைக்காக பிற நாடுகளுக்கு சென்று வேலை செய்யும் ஒரு சில தனிமனிதனின் வாழக்கை எவ்வளவு துயர்கொண்டது என்பதை வேல்முருகன் என்ற ஒருவரின் இறப்பு நிரூபித்துள்ளது. பல ஆசை கனவுகளோடு இந்தியாவில் இருந்து மலேசியா சென்ற ஒரு வாலிபருக்கு நேர்ந்த இந்த கொடூரம் மனதை நெகிழவைக்கின்றது.

புதுக்கோட்டை மாவட்டடத்தில் உள்ள நீர்பழனி என்ற இடத்திற்க்கு அருகே உள்ளது நரியப்பட்டி என்ற கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வந்தவர் தான் வேல்முருகன் இவருடைய தந்தை ஆறுமுகம். கடந்த 2017ம் ஆண்டு வேல்முருகனுக்கும் நிஷா ராணி என்கின்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. ஆனால் குடும்ப சூழல் காரணமாக திருமணமான இரண்டே மாதத்தில் அவர் வெளிநாடு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

வேறு வழியின்றி தனது குடும்பத்திற்காக தனது நண்பர் மூலம் மலேசியாவில் கிடைத்த வேலையை செய்ய அவர் புறப்பட்டார். திருமணமாகி இரண்டே மாதத்தில் அவர் தனது தாய் மற்றும் தந்தை மட்டுமல்லாமல் தனது மனைவியையும் பிறந்து மலேசியா சென்றார். அவர் மலேசியா சென்று ரவிராஜ் என்பவரின் சலூன் கடையில் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவருக்கு அடிக்கடி உடல் ரீதியாக பல பிரச்சனைகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் உடல்நிலையில் மிகவும் மோசமடைந்து நிலையில் வீடு திரும்ப முடிவெடுத்து வேல்முருகன் நேற்று அதிகாலை ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் தாயகம் திரும்பியுள்ளார். தனது கணவனை பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திக்கப்போகிறோம் என்ற சந்தோஷத்தில் இருந்த மனைவிக்கும் தனது பிள்ளையை காணப்போகிறோம் என்று காத்திருந்த தாய் தந்தையருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

விமானத்தில் பயணம் செய்த அனைவரும் இறங்கிவிட, வேல்முருகன் மட்டும் அவரது இருக்கையில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். விமான நிலைய மருத்துவர் வந்து பரிசோதித்து அவர் இறந்ததை உறுதிப்படுத்தினார். இந்த செய்தி அறிந்த வேல்முருகனின் குடும்பத்தினர் திருச்சி விமான நிலையத்தில் அழுது புலம்பிய காட்சி காண்போரை கண்கலங்க செய்தது.

குடும்பத்தின் துயர் துடைக்க வெளிநாடு சென்ற மகனிடம் அதிக வேலை வாங்கிக்கொண்டு அவர் உடல்நிலையில் குறித்து கவலைபடவில்லை என்று அவரது தாய் தந்தை புகார் அளித்துள்ளனர். தற்போது இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகின்றது.

Related posts