அதிக வயதுடைய பெண்களை இளம் வயது ஆண்கள் திருமணம் செய்துகொள்வது மேலைநாடுகளில் பெரிய அளவில் தவறான விஷயமாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. அண்டை நாடான இந்தியாவிலும் கூட ஆண், பெண் இருவரும் மேஜர் என்றால் வயது ஒரு தடையாக பார்க்கப்படுவதில்லை. ஆனால் அதுவே இருவரில் ஒருவர் மைனராக இருந்தாலும் சட்டம் தன் இரும்பு கரம்கொண்டு அவர்களை தண்டிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தனது பள்ளியில் படித்த மாணவனை அழைத்து சென்று திருமணம் செய்துகொண்ட ஆசிரியை தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிக்கத்தம்பூர் என்று ஊரை சேர்ந்த என்ற ஆசிரியைக்கும் (வயது 26) அதே பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவருடன் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் 5ம் தேதி இருவரும் பள்ளிக்கு சென்ற நிலையில் மாலையில் இருவருமே மயமாகியுள்ளனர்.
சந்தேகம் அடைந்த அந்த மாணவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் அந்த பள்ளியை சேர்ந்த ஷர்மிளா என்ற ஆசிரியை மீது புகார் அளிக்க, இருவரும் ஊரை விட்டே ஒன்றாக ஓடியது தெரியவந்தது. இந்நிலையில் ஷர்மிளாவின் செல்போனை ட்ராக் செய்த போலீசார் திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு அவர்கள் சென்றது தெரியவந்தது.
அதன் பிறகு இருவரும் திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் இருக்கும் அவரது சினேகிதி வீட்டில் இருப்பது தெரியவர துறையூர் போலீசார் அவர்களை கைது செய்தனர். விசாரணையில் இருவரும் திருவாரூர் சென்று திரும்பி தஞ்சை பெரிய கோவிலில் திருட்டுத்தனமாக திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. சிறுவன் மைனர் என்பதாலும் ஆசிரியை வயதில் மூத்தவர் என்றபோதும் அவரை POCSO (Protection of Children’s from Sexual Offence Act) சட்டத்தில் கைது செய்துள்ளனர் போலீசார். தற்போது மகிளா நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகின்றது.