தமிழகத்தில் 16வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த ஜீன்.21 துவங்கி நடத்துவருகிறது.
ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சி இடையே பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை கூறி காரசாரமான விவதாங்கள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த பல்வேறு விவாதங்களும் கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகிறது.
அப்போது ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பதிலளித்து பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ,
தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல் வாக்கு எண்ணிக்கை நாள் வரை எடப்பாடி பழனிசாமி அவர்கள் கொரோனா தடுப்பு பணிகளில் அலட்சியம் காட்டி சரியாக பணிகளை மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டினார்.
மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பது தெரிந்து அலட்சியமாக செயல்பட்டுள்ளார் என்றும் கூறினார்.
மேலும் “கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளக்கூடாது என எடப்பாடி பழனிசாமியின் கைகளை யாரும் கட்டி வைக்கவில்லை. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தில் வரும் காட்சிகள் போல பிப்ரவரி முதல் மே வரையிலான காலத்தில் தடுப்பு பணிகளை மேற்கொள்ள மறந்துவிட்டார்” என முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இதற்கு பதிலளித்துள்ள எடப்பாடி பழனிசாமி அவர்கள் தேர்தல் அறிவித்த பிறகு கொரோனா தடுப்பு பணிகளில் அலட்சியம் காட்டவில்லை. ஆலோசனை கூட்டத்தை நடத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசுக்கு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பிய நிலையில் மத்திய அரசிடமிருந்து பதில் ஏதும் கிடைக்கவில்லை. அதனால் அதிகாரிகளை வைத்து தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்பட்டுத்தப்பட்டது என விளக்கம் அளித்துள்ளார்