TamilSaaga

கல்யாணம் ஆன 2 நாளில் சர்ச்சை… சினேகனை பாடாய்படுத்தும் டைனமிக் திருமணம்!

பாடலாசிரியரும், நடிகருமான சினேகனுக்கும், நடிகை கன்னிகா ரவிகுக்கும் உலக நாயகன் கமல் ஹாசன் முன்னிலையில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தின் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரல். சினேகன் கன்னிகா வரவேற்பு நிகழ்ச்சியிலும் பல திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், கல்யாணம் ஆன புது மாப்பிள்ளையை டைனமிக் திருமணத்தின் சர்ச்சை சுத்தி சுத்தி அடிக்கிறது.

அது என்ன டைனமிக் திருமணம்?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சினேகன் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டார். .
இன்னும் 10 வருடத்தில் ஒரு அரசியல் புரட்சியை இந்த டைனமிக் திருமணம் ஏற்படுத்த போகும் என்றும் அவர் பதிவு செய்திருந்த திருமணம் தான் அது. அந்த திருமணம் அன்றைய காலக்கட்டத்தில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்தது. மகளிர் சங்கம், மாதர் சங்கங்களும் எதிர்ப்பு குரலை பதிவு செய்திருந்தனர்.

இந்த திருமணத்தில் விதவை பெண்கள் மாலை எடுத்துக்கொடுத்தனர். தாலி இல்லை.
திருமணத்திற்கு பின்னர் மன மக்களை வாழ்த்த வந்த பலரும் பாரபட்சம் பார்க்காமல் மணமக்களை கட்டி தழுவி முத்தமும் கொடுத்தனர். மணமகனின் நண்பர்கள் மணப்பெண்ணை கட்டியணைத்து முத்தம் கொடுத்து வாழ்த்து கூறுவார்கள். இன்னும் ஏகப்பட்ட சர்சையான செயல்களால் இந்த திருமணம் விமர்சனங்களை சந்தித்திருந்தது. இந்த திருமணத்திற்கு சினேகன் பெரும் ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 43 வயதில் திருமணம் முடித்திருக்கும் சினேகன் ஏன் டைனமிக் திருமணம் செய்யவில்லை என்பது தான் நெட்டிசன்களின் கேள்விகாக உள்ளது. அதுமட்டுமில்லை சோஷியல் மீடியாவில் பலரும் டைனமிக் திருமணத்தின் பழைய வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். சினேகனை டேக் செய்தும் கேள்வி எழுப்புகின்றனர். புதுமாப்பிளை சினேகன் இதுவரை அதுக்குறித்து பேசவில்லை.

Related posts