TamilSaaga

“இது ஒரு தொடர்கதை” : திருச்சி விமான நிலையத்தில் சிக்கிய கடத்தல் தங்கம் – குடந்தையை சேர்ந்த இருவர் கைது

திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 59 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த 2 பேரிடம் அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பெருந்தொற்று தற்போது பல நாடுகளில் நீர்த்து வரும் நிலையில் உலக அளவில் பன்னாட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்கி வருகின்றன.

சிங்கப்பூர், துபாய், மலேசியா, மஸ்கட் மற்றும் ஓமன் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கும், அதேபோல திருச்சியில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வெகு சில பயணிகள் தங்கம் கடத்தி வருவது ஒரு வாடிக்கையான செயலாகவே மாறிவிட்டது. அதேபோல அந்த பயணிகள் அதிகாரிகளின் பிடியில் சிக்கிக் கொள்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

சில சமயங்களில் அந்த கடத்தல்காரர்களுக்கு உடந்தையாக செயல்படும் சில அதிகாரிகளும் வெளியிடங்களுக்கு மாற்றப்பட்ட சம்பவம் நடந்து உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை துபாயில் இருந்து ஒரு விமானம் ஒன்று திருச்சி வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை விமான நிலையத்தை சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களின் நகரமென அழைக்கப்படும் கும்பகோணத்தை சேர்ந்த 38 வயது மதிக்கத்தக்க பயணி கடத்தி வந்த 33 லட்சம் மதிப்புள்ள 695 கிராம் மதிப்புள்ள தங்கம்.

மற்றும் அதே ஊரைச் சேர்ந்த 24 வயது வாலிபர் கடத்தி வந்த ரூபாய் 26.30 லட்சம் மதிப்புள்ள 555 கிராம் தங்கம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts