TamilSaaga

“அது 32 கோடி இல்ல.. 18 கோடி தான்” – “ஆயிரத்தில் ஒருவன்” ரகசியத்தை போட்டு உடைத்த செல்வராகவன்

செல்வராகவன், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான ஒரு பெயர். 2002ம் ஆண்டு வெளியான “துள்ளுவதோ இளமை” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்க்கு இரண்டு கலைஞர்கள் அறிமுகம் செய்யப்பட்டார்கள். ஆனால் அன்று இந்த தமிழ் சினிமா உலகம் அறிந்திருக்கவில்லை அவர்கள் இருவரும் மாபெரும் கலைஞர்களாக உருவெடுக்க போகிறார்கள் என்று.

“துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் அறிமுகமான தனுஷ் இன்று கோலிவுட் உலகின் டாப் ஹீரோக்கள் பட்டியலில் உள்ளார் என்றால் அது சற்றும் மிகையல்ல. அதே போல அந்த “துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் ஒரு எழுத்தாளராக தனது பயணத்தை தொடங்கிய செல்வராகவன் என்ற இயக்குநர் இன்று ரசிகர்கள் கொண்டாடும் ஒரு மாபெரும் இயக்குநராக திகழ்ந்து வருகின்றார்.

7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் என்று பல தரமான திரைப்படங்களை அவர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக்கியுள்ளார் என்றால் அது மிகையல்ல. இந்நிலையில் அவர் இயக்கத்தில் பார்த்திபன், கார்த்திக், ரீமாசென் மற்றும் ஆண்ட்ரியா உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்து வெளியான “ஆயிரத்தில் ஒருவன்” படம் மாபெரும் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அந்த படம் குறித்த ஒரு சுவாரசிய தகவலை வெளியிட்டுள்ளார் இயக்குநர் செல்வராகவன் இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் “ஆயிரத்திலொருவனின் உண்மையான பட்ஜெட் 18 கோடி. ஆனால் இது ஒரு மெகா பட்ஜெட் படமாக மிகைப்படுத்த 32 கோடி படமாக அறிவிக்க முடிவு செய்தோம். ஆனால் அது ஒரு முட்டாள்தனம்! படம் உண்மையான பட்ஜெட் அளவிற்கு வசூல் செய்தாலும். அது சராசரியாக கருதப்பட்டது! முரண்பாடுகள் எதுவாக இருந்தாலும் பொய் சொல்லக் கூடாது என்று கன்றுகொண்டேன்” என்று கூறியுள்ளார்.

Related posts