TamilSaaga

மூட்டை மூட்டையா சில்லறை.. உண்டியலில் சேர்த்த 1 ரூபாய் நாணயங்கள்.. 2.50 லட்சத்துக்கு சில்லறை கொடுத்தே பைக் வாங்கிய இளைஞர் – நீங்கெல்லாம் நல்லா வரணும் தம்பி!

சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள் அதற்கு சான்றாகியுள்ளார் சேலம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர். தனது சிறு வயது கனவு ஒன்றை சுமார் 2.5 லட்சம் 1 ரூபாய் நாணயங்களை கொண்டு நிறைவேற்றியுள்ளார் அவர். சேலம் அம்மாபேட்டை காந்தி மைதானம் பகுதியை சேர்ந்தவர் தான் பூபதி, தற்போது youtube சேனல் ஒன்றை நடத்தி வரும் இவருக்கு சிறு வயது முதலே விலை உயர்ந்த பைக் வாங்க வேண்டும் என்பதே மிக பெரிய ஆசையாய் இருந்து வந்துள்ளது.

“வீடு கூட இல்ல.. ரோட்டில் பிச்சையெடுத்த இளைஞர் மீது காதல் கொண்ட இளம் பெண்” – அந்த தேவதையின் இளகிய மனதால் இன்று “ஒஹோ” வாழ்க்கை

சிறுவயது முதலே 1 ரூபாய் நாணயங்களை உண்டியலில் சேகரித்து வந்த அவர், ஒருகட்டத்தில் அதில் 10,000 ரூபாய் சேமிக்க முடிந்ததை எண்ணி ஆச்சர்யப்பட்டுள்ளார். அப்போது தான் ஏன் நம் கனவு பைக்கை முழுமையாக 1 ரூபாய் நாணயங்களை வைத்து வாங்க கூடாது என்ற ஆசை உதித்துள்ளது. உடனே 1 ரூபாய் நாணயங்களை சேகரிக்க துவங்கினர் பூபதி. சேலம் மட்டுமில்லாமல் மதுரை உள்ளிட்ட நகரங்களிலும் சென்று 1 ரூபாய் நாணயங்களை சேகரிக்க துவங்கியுள்ளார்.

ஆனால் சுமார் 2.5 லட்சம் 1 ரூபாய் நாணயங்களை பெற்றுக்கொண்டு பைக் கொடுக்க அவ்வளவு எளிதில் எந்த வாகன விற்பனை நிறுவனமும் ஒப்புக்கொள்வது. அவ்வளவு காசையும் எப்போ எண்ணி முடிகிறது என்று தான் அனைவரும் நினைப்பார்கள். இதனால் சுமார் 2 மாத காலம் பல வாகன விற்பனை நிலையங்களை அணுகியுள்ளார் பூபதி. இறுதியில் தான் வசிக்கும் அம்மாபேட்டை பகுதியில் இருந்த ஒரு நிறுவனமே அந்த 1 ரூபாய் நாணயங்களை பெற்றுக்கொண்டு வாகனத்தை கொடுக்க முன்வந்தது.

மகிழ்ச்சியில் மூழ்கிய பூபதி மூட்டை மூட்டையாக சேமித்து வைத்திருந்த நாணயங்களை அந்த நிறுவனத்திற்கு கொண்டுவர கடை ஊழியர்கள் சுமார் 10 மணிநேரம் செலவிட்டு அந்த நாணயங்களை எண்ணி முடித்தனர். இறுதியில் தனது சிறு வயது கனவான அந்த 2.5 லட்சம் மதிப்புள்ள பைக்கை பூபதி ஆசையோடு பெற்றுக்கொண்டார். சிறு துளி பெரு வெள்ளம் என்பதை நிரூபிக்கும் விதமாக அந்த இளைஞர் செயல்பட்டுள்ளார்.

“சிங்கப்பூர் வாழ் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்” : மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்படும் “சலுகை” – MOM மற்றும் MND கூட்டறிக்கை

கடைகள், கோவில்கள், வங்கிகள் என்று பல இடங்களில் நாணயங்களுக்காக நான் அலைந்துள்ளேன். சிறு சேமிப்பு என்பது எவ்வளவு கடினம் அதே போல அது இறுதியில் நமக்கு எவ்வளவு பயனளிக்கும் என்பதை உணர்த்தத்தான் இவ்வாறு செய்தேன் கூறுகின்றார் அந்த இளைஞர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts