TamilSaaga

ரசிகர் கேட்ட அருவருப்பான கேள்வி.. “உங்க வீட்டு பெண்களுக்கும் இடுப்புக்கு மேல ஒரு ஜோடி இருக்கு” – செருப்படி பதில் கொடுத்த பிரியா பவானி சங்கர்

சின்னத்திரையில் வாழ்க்கையை துவங்கிய, இன்று முன்னணி நடிகர்கள் வரிசையில் இருக்கும் பல நடிகர் நடிகைகள் தமிழ் சினிமாவில் உண்டு. அந்த வகையில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை துவங்கிய பிரியா பவானி சங்கர் இன்று டாப் நடிகைகளின் லிஸ்டில் உள்ளார்.

தமிழ் செய்தி வாசிப்பாளராக வலம்வந்த பிரியா அதன் பிறகு சின்னத்திரை நாடங்களில் நடிக்க துவங்கினர். தனது அதீத திறமையால் வெகு சீக்கிரத்தில் வெள்ளித்திரை வாய்ப்பு அவரை தேடி வந்தது. கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வெளியன் மேயாத மான் என்ற படத்தின் மூலம் நாயகியாக அவர் அறிமுகமானார்.

தொடர்ச்சியாக கார்திக்குடன் கடைக்குட்டி சிங்கம், எஸ்.ஜே. சூர்யாவுடன் மான்ஸ்டர், அருண் விஜயுடன் மாபியா என்று பல முன்னணி நடிகர்களுடன் சிறப்பான பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து அசத்தினார்.இந்த 2022ம் ஆண்டில் மட்டும் இவருடைய நடிப்பில் 10 திரைப்படங்கள் வெளிவர காத்திருக்கின்றனர்.

சிங்கப்பூர்.. மனம் மற்றும் உடல் ரீதியாக தாக்கப்படும் பொது ஊழியர்கள்.. ஏன்? மனம் திறந்த “ஆம்புலன்ஸ் பணியாளர் சிவச்சந்திரன்” – இனவெறி தான் காரணமா?

இந்நிலையில் தனது சமூக வலைத்தளங்களிலும் அவ்வப்போது ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர் தனது ரசிகர்களுடன் அவ்வப்போது இணைய வழியில் உரையாடி வருகின்றார். இந்நிலையில் அவருடைய இன்ஸ்டாகிராம் பதில் அருவருக்கத்தக்க வகையில் ஒரு ரசிகர்கள் கேள்வி ஒன்றை கேட்டுள்ளார்.

உங்கள் ப்ரா அளவு என்ன? என்று கேட்ட அந்த ரசிகரிடம்.. “எனக்கு 34D ப்ரோ, மார்பகங்கள் என்பது நான் ஒன்றும் வேற்று கிரகத்திலிருந்து வாங்கி வந்தது இல்லை. உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பெண்களுக்கும் அது ஒரு ஜோடி இருக்கும், ஒருவேளை அவர்கள் போட்டிருக்கும் T-Shirtஐ உற்றுப்பார்த்தால் அது உங்களுக்கு தெரியும், அதற்கு உங்களுக்கு வாழ்த்துக்கள்” என்று பளார் பதிலை கூறியுள்ளார்.

“சிங்கப்பூரின் அடுத்த பிரதமராக லாரன்ஸ் வோங் பொறுப்பேற்பார்” : பிரதர் லீ அறிவிப்பு – நாட்டிற்காக அரும்பாடுபடுவேன் என்று வோங் சூளுரை!

நடிகர் நடிகைகள் மீது தொடரும் இது போன்ற வன்மமும், கொச்சைமிகுந்த கேள்விகளும் பல ஆண்டுகளாக ஒரு தொடர்கதையாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts