TamilSaaga

“என் காலத்துக்கு பிறகு அவன் எப்படி வாழப்போரானோ தெரியல” – 29 ஆண்டுகளாக மகனை தோளில் சுமக்கும் அற்புதத் தாய்!

ராஜசேகர், இவர் முதுகெலும்பில் ஏற்படும் ஒரு மிக அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் அதனை SMA என்று அழைக்கின்றார்கள். பிறப்பில் இருந்தே ராஜசேகருக்கு இந்த நோய் இருந்துள்ளது. இந்த நோய் பாதித்தவர்களுக்கு உடலுக்கு தேவைப்படும் முக்கியமான ஒரு வகை புரத சத்து கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் குழந்தை வளர வளர அதனுடைய செயல்பாடுகள் மெல்ல மெல்ல குறைந்துவிடுமாம். அதேபோலத் தான் ராஜசேகராலும் தனது 12 வயது வரை கொஞ்சம் சாய்ந்து நடந்து செல்ல முடிந்த நிலையில் தற்போது நடக்கும் சக்தியை முற்றிலும் இழந்துள்ளார் ராஜசேகர்.

இது என்ன உன் வீடா? சிங்கப்பூர் தெருக்களில் “ஆடையின்றி ஒய்யாரமாக திரிந்த வாலிபர்” – MTOக்கு உத்தரவிட்ட நீதிபதி

ராஜசேகர், முதுகெலும்பில் ஏற்படும் ஒரு மிக அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பிறப்பில் இருந்தே ராஜசேகருக்கு இந்த நோய் இருந்துள்ளது. இந்த நோய் பாதித்தவர்களுக்கு உடலுக்கு தேவைப்படும் முக்கியமான ஒரு வகை புரத சத்து கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் குழந்தை வளர வளர அதனுடைய செயல்பாடுகள் மெல்ல மெல்ல குறைந்துவிடுமாம். அதேபோலத் தான் ராஜசேகராலும் தனது 12 வயது வரை கொஞ்சம் சாய்ந்து நடந்து செல்ல முடிந்த நிலையில் தற்போது நடக்கும் சக்தியை முற்றிலும் இழந்துள்ளார் ராஜசேகர்.

அவருக்கு முதுகெலும்பும் வளைய துவங்கிவிட்டது, B.Sc Computer Science படித்துள்ள ராஜசேகரை அவரது தாய் தான் சுமார் 29 ஆண்டுகளாக பள்ளிக்கும் கல்லுரிக்கும் தூக்கி சென்று வருகின்றார். “பள்ளியிலும் சரி, கல்லுரியில் சரி காலையில் அம்மா எங்கு உக்காரவைத்தார்களோ மாலை வரை அங்கு தான் அமர்ந்திருப்பேன்” என்கிறார் ராஜசேகர். ஆனால் ஒரு காலகட்டம் வந்ததும், என் சக மாணவர்களும் எனக்கு உதவ ஆரம்பித்தனர், என்னை அவர்களோடு தூக்கி சென்றனர் இருப்பினும் இன்று வரை நான் அனைவருக்கும் ஒரு பாரமாக மட்டுமே உள்ளேன்.

“என் காலம் முடிவதற்குள் என் புள்ளைய கரைசேக்கணும், அவனுடைய அன்றாட செயல்களை அவனே பார்த்துக்கணும் அவ்வளவு தான் என் ஆசை. இன்றளவும் என் மகன் டாய்லெட் போகணும்னா கூட என்னைத்தான் நம்பியிருக்கான்” என்று கண்ணீருடன் கூறினார் ராஜசேகரின் தாய். என் காலத்திற்கு பிறகு என்ன ஆவானோ என்ற பயம் இருந்துகிட்டே இருக்கு என்கிறார் அவர். ராஜசேகரின் இந்த நோய்க்கு மருந்தும் உள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் அது அவர் வாழ்நாள் முழுவதும் எடுத்துக்கொள்ளவேண்டிய ஒன்று. மாதத்திற்கு 12 லட்சம் வரை செலவாகும் இந்த மருந்தினை இப்பொது சில நல்ல உள்ளம் கொண்டவர்கள் அவருக்கு அளித்து வருகின்றனர்.

“மா.. நீ எல்லா குழந்தைகளுக்கும் Help பண்ணனும்” : சொந்த மகனை இழந்து இன்று பல குழந்தைகளை காக்கும் சிங்கப்பூர் விக்னேஸ்வரி

ஆனால் இந்த வகை நோய் உடையவர்களுக்கு அரசும் முன் வந்து பல சலுகைகளை அளிக்க வேண்டும் என்பதே ராஜசேகர் மற்றும் அவருடைய தாயின் வேண்டுகோளாக உள்ளது. பெற்றது முதல் இன்று வரை 29 ஆண்டுகளாக குழந்தை போல ராஜசேகரை அவரது தாய் தூக்கி சுமக்கிறார். உடன்பிறந்தவர்கள் திருமணம் ஆகி சென்றுவிட்டதால் அவர்களும் உதவிக்கு வருவதில்லை. ஆகையால் தனது காலம் முடிவதற்குள் என் பிள்ளையை தேற்றிவிட உதவி செய்யவேண்டும் என்று தமிழக முதலாவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் அவரது தாய்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts