TamilSaaga

கவிஞர் குடும்பத்தில் ஒரு அழகு பெண் போயட்… மதன் கார்க்கி மனைவி நந்தினி பற்றிய சுவாரசியங்கள்!

நந்தினி மதன் கார்க்கி அதிகம் பேசப்படாத முகம். ஆனால் சத்தமில்லாமல் ஏகப்பட்ட சாதனைகளை செய்துகொண்டிருக்கிறார். ஒரு பக்கம் கவிஞர் வைரமுத்துவின் மருமகள் என்ற பெயர் மறுபுறம் நவீன கவிஞர் மதன் கார்க்கின் மனைவி. ஆனால் தனக்கான தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு சாதித்து வருகிறார்.

நந்தினி கார்க்கி ஒரு ஆங்கிலக் கவிஞர் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்று, அமெரிக்காவில் பணி புரிந்து, ஏழு கண்டங்களுக்கும் பயணம் செய்த தன் அனுபவங்களின் கூற்றாக ஒரு ஆங்கில புத்தகத்தை எழுதி அதை வெளியிட்டு பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

கடந்த ஓராண்டாக தினமொரு சங்கப்பாடலை பற்றிய விளக்க உரையை இணையவழி பாட்காஸ்ட் செய்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.அதுமட்டுமில்லை இவர் சப்டைட்டிலிஸ்ட் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. அதுமட்டுமில்லை இதற்காக பல விருதுகளையும் வாங்கியுள்ளார்.

கார்க்கி – நந்தினியின் திருமணம் காதல் திருமணம் ஆகும். அண்ணா பல்கலைகழகத்தில் இருவரும் படிக்கும் போதே காதல் கொண்டு பெற்றோரின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நடந்தது. அழகான 2 குழந்தைகள். இதற்குநடுவில் தனது கனவுகளையும் எட்டிக்கொண்டிருக்கிறார்.

Related posts