இந்திய அளவில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் வரவேற்பு உள்ளது என்பது பலரும் அறிந்ததே. தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் பல முன்னணி ஹீரோக்களை கொண்டு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. பல சர்ச்சைகள் இந்த நிகழ்ச்சிகளை சுற்றி இருந்தாலும் மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாகவே பிக் பாஸ் திகழ்ந்து வருகின்றது.
இந்நிலையில் தமிழில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 5ம் சீசனில் பங்கேற்க உள்ள பங்கேற்பாளர்களை குறித்து ஏற்கனவே பல கணிப்புகள் இணையத்தில் வலம்வர தொடங்கியுள்ளன. குறிப்பாக விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பலர் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேறக் உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகின்றது.
இதனையடுத்து குக் வித் கோமாளி புகழ் சுனிதா மற்றும் கனி ஆகியோர் பங்கேற்க உள்ளதாகவும். மற்றும் பாபா மாஸ்டர், நடிகர் ஜான் விஜய், பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன், லட்சுமி ராமகிருஷ்ணன். மேலும் டிக் டாக் மூலம் பிரபலமான ஜி.பி. முத்து மற்றும் நடிகை ஷகிலாவின் மகள் மிகா உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் இதுவரை இந்த நிகழ்ச்சி குறித்தும் பங்கேற்பாளர்கள் குறித்தும் எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.