தமிழ் திரையுலக நடிகர் நடிகைகளுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் உண்டோ, அதே அளவிற்கு சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கும் மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு உண்டு. அந்த வகையில் ராகவ் ப்ரீத்தா ஜோடி மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலம்.
மாதவன் ஜோதிகா நடிப்பில் வெளியான டும் டும் டும் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் தான் ப்ரீத்தா. அதை தொடர்ந்து மேலும் சில படங்களிலும் நடித்து வந்தார், இவருடைய கணவர் தான் ராகவ், ப்ரீத்திக்கு முன்பே ராகவ் திரையுலகில் பிரபலம்.
எந்திரன் படத்தில் கூட ஒரு சிறிய வில்லன் கதாபாத்திரன் ஏற்று நடித்திருப்பார், அதுமட்டுமல்லாமல் இயக்கம், கம்போசிங், நடனம் என்று ராகவ் பல திறமைகளை கொண்ட ஒரு கலைஞர் என்றே கூறலாம். தன்னுடன் பணியாற்றி வந்த பிரீத்தாவை காதல் திருமணம் செய்துகொண்டார் ராகவ் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வெளியான மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அசத்திய ராகவ் ப்ரீத்தா ஜோடி, டைட்டில் வென்றது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாக கலைத்துறையில் இருந்துவரும்போதும் இருவரும் மவுசு குறையாமல் இன்றளவும் நிலைத்து நிற்கின்றனர் என்று தான் கூறவேண்டும்.
இந்நிலையில் நடிகை ப்ரீத்தா தற்போது ஒரு உருக்கமான காணொளி ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது “எனது இன்ஸ்டா குடும்பத்தினருக்கு வணக்கம், எனது அம்மாவை நான் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுகொண்டிருக்கிறேன்”.
“அவருக்கு ஏற்கனவே இரண்டு மேஜர் சர்ஜரி நடந்துள்ள நிலையில், இன்று காலை அவர் வீட்டில் நடந்துகொண்டிருக்கும்போது தவறி விழுந்துவிட்டார். அந்த அதிர்ச்சியில் அவரால் தற்போது பேசமுடியவில்லை, கை கால்கள் செயலிழந்து உள்ளது. தயவு செய்து அவருக்காக பிராத்தனை செய்துகொள்ளுங்கள்” என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்கு இணைய வழியில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். பிரபலங்கள் பலரும் அவருக்கு மனரீதியாக உதவ அவருடன் தற்போது உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.