TamilSaaga

சிங்கப்பூர் பொது தூதரக அதிகாரி பாங் கோக் தியான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு – முழு விவரங்கள்

சென்னையில் நேற்று சிங்கப்பூர் பொது தூதரக அதிகாரி பாங் கோக் தியான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு பற்றி சிங்கப்பூர் தூதரக பணிகளின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

“சென்னையில் போங் கோக் தியான் தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்று இருக்கும் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் . முதல்வருடனான இந்த சந்திப்பின் பொது தொழில்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு உடன் இருந்தார் . சிங்கப்பூர் இந்தியா இடையிலான இந்த அன்பான உறவு மேலும் உயர்ந்த இலக்குகளை எட்ட ஒத்துழைப்பை வழங்கும்” என்று அந்த செய்தியில் பதிவிடப்பட்டு உள்ளது.

இதற்கு முன்பாக 300 ஆக்சிஜன் செறிவூட்டிகளை தமிழகத்துக்கு வழங்கும் பொது, போங் கோக் தியான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வலிமையான தலைமை மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts