TamilSaaga

“சிங்கப்பூரில் அழுகிய நிலையில் ஆண் பிணம்” : விற்பனை மையத்தில் முதியவருக்கு ஏற்பட்ட “அவல நிலை”

சிங்கப்பூரில் 69 வயதான மனிதனின் உடல் பாசிர் பஞ்சாங் மொத்த விற்பனை மையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த உடல் அதீதமாக சிதைவடையத் தொடங்கி துர்நாற்றம் வீசியதை அடுத்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் உடல் மீட்கப்பட்டது. அவரது உடல் அக்டோபர் 9ம் தேதி மாலை 5:20 மணியளவில் மொத்த விற்பனை மையத்தின் தொகுதி 10-ல் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த மொத்த விற்பனை மையத்தில் இறந்த அந்த நபரின் முந்தைய முதலாளியின் கூற்றுப்படி, இறந்தவர் சுமார் 20 ஆண்டுகளாக அந்த பகுதியில் காய்கறி மொத்த விற்பனையாளராக இருந்தார் என்றும். மேலும் தனது வியாபாரத்தை நிறுத்திய பின்னர் மையத்தில் உள்ள மற்ற மொத்த விற்பனையாளர்களுக்காக தொடர்ந்து பணியாற்றினார் என்றும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் 60 வயதான மொத்த வியாபாரி ஷின் மின்னிடம் பேசுகையில், “கடந்த அக்டோபர் 9ம் தேதி காலை 11 மணியளவில் “துர்நாற்றத்தை” உணர்ந்ததாகக் கூறினார். ஆரம்பத்தில் அந்த துர்நாற்றம் இறந்த ஏதோ ஒரு விலங்கிடம் இருந்து வருவதாக நினைத்தேன் என்று அவர் கூறினார்.

ஆனால் பின்னர் ஒரு யூனிட்டில் இருந்து “துர்நாற்றம் வீசும் திரவத்தை” பார்த்துள்ளார். அது வித்யாசமான துர்நாற்றமாக இருப்பதை அவர் உணர்ந்தார். அதன் பிறகு அது உடல் என்று அறிந்து போலீசாருக்கு தகவல் அளிக்க, அவர்கள் உடனடியாக அங்கு வந்தனர் என்றார் அவர். இறந்தவர் வழக்கமாக கிடங்கில் தூங்குவார் என்றும் அவரது காலில் சில பிரச்சனைகள் இருந்ததாகவும் அக்கம்பக்கத்தினர் கூறினர். போலீசார், அந்த நபர் அசைவில்லாமல் கிடந்ததாகவும், இயற்கை காரணங்களால் அவர் இறந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.

பெருந்தொற்று கிளஸ்டரைப் பதிவு செய்த இடங்களில் பாசிர் பஞ்சாங் மொத்த விற்பனை மையமும் ஒன்றாகும். மேலும் செப்டம்பர் 30 அன்று மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்பு மூன்று நாட்களுக்கு மூடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Related posts