சீனாவைச் சேர்ந்த Ding Liren-க்கும் இந்தியாவைச் சேர்ந்த Gukesh D-க்கும் இடையே நடைபெறும் இந்த உலக சாம்பியன் செஸ் போட்டிக்கு சிங்கப்பூரை தேர்ந்தெடுத்துள்ளது, FIDE (International Chess Federation).
இந்தப் போட்டி நவம்பர் 20 முதல் டிசம்பர் 15 வரை நடைபெறவுள்ளது. இதற்கான பரிசுத்தொகை 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
இந்த போட்டியை நடத்துவதற்காக இந்தியாவில் உள்ள டெல்லி, சென்னை உடன் சேர்ந்து சிங்கப்பூர்-ம் விண்ணப்பித்திருந்தது. இறுதியில் இந்த வாய்ப்பு சிங்கப்பூருக்கு கிடைத்துள்ளது.
கடந்த 138 ஆண்டு கால உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் சிங்கப்பூரில் போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறை.
இதுகுறித்து FIDE தலைவர் கூறுகையில் “சிறந்த சுற்றுலா மற்றும் தொழில் நகரமான சிங்கப்பூரில் இந்த போட்டி நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. விண்ணப்பித்த மற்ற நகரங்களுடனும் வரும் காலங்களில் போட்டிகளை நடத்த ஆவலாக உள்ளோம். சிங்கப்பூரில் நடைபெறும் இந்த போட்டி மிகவும் அபாரமாக நடத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை” என தெரிவித்தார்.
மேலும் இந்த போட்டி நடைபெறும் இடம் குறித்து பின்னர் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை இந்தப் போட்டியில் Gukesh வெற்றிபெறும் பட்சத்தில் இளம்வயதில் (18) உலக சாம்பியன் ஆன முதல் செஸ் போட்டியாளர் என்ற பெருமையைப் பெற்றிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.