TamilSaaga

ஆசிய ஹாக்கி போட்டியில் சிங்கப்பூரை தாறுமாறாக வீழ்த்திய இந்திய அணி… 16-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி!

ஆசிய விளையாட்டு போட்டிகள் தற்பொழுது நடைபெற்று வரும் நிலையில் ஹாக்கி போட்டியில் ஆண்களுக்கான ஏ பிரிவு போட்டியில் இந்தியா 16-1 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூரை அபாரமாக வீழ்த்தியுள்ளது. திங்கள்கிழமை நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தலைவர் நான்கு கோல்களையும் மற்றும் மந்திப் சிங் மூன்று கோல்களையும் இட்டு அணியின் வெற்றிக்கு காரணமாக விளங்கினர்.

ஆட்டம் முழுவதும் விட்டுக் கொடுக்காமல் அபாரமாக ஆடிய இந்திய அணி மொத்தம் 16 கோல்களை வெற்றிகரமாக குவித்தது. இந்த மாபெரும் வெற்றியின் மூலம் இந்திய அணி ஆசிய விளையாட்டு போட்டியில் ஹாக்கி பிரிவில் தனது பலத்தை நிரூபித்துள்ளது. இந்த ஆட்டத்தினை இந்திய அணி ஜெயிக்கும் பட்சத்தில் வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி நடப்பு சாம்பியன் ஆன ஜப்பான் களத்தில் சந்திக்க உள்ளது.

அதற்கு அடுத்தபடியாக செப்டம்பர் 30ஆம் தேதி பாகிஸ்தான் உடன் விளையாட உள்ளது.இந்தியா ஜெயிக்கும் பட்சத்தில் கடைசி ஆட்டமான அக்டோபர் இரண்டாம் தேதி பங்களாதேஷை சந்திக்கும். இந்திய நாட்டின் தேசிய விளையாட்டான ஹாக்கி போட்டியில் இந்தியா தொடர்ச்சியாக தனது பலத்தினை நிரூபித்து வருவது பாராட்டுத்தக்கதாகும்.

Related posts