TamilSaaga

சிங்கப்பூரின் புதிய National Record.. தடைகளை தகர்த்தெறிந்த சாந்தி பெரேரா – உலக நாடுகள் மத்தியில் கம்பீரமாக நின்ற சிங்கப்பூர்!

இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் மொத்தம் 20 விளையாட்டுகளில் 280 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இம்முறை புதிதாக 20 ஓவர் மகளிர் கிரிக்கெட், ஜூடோ ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூர், இந்தியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, வங்கதேசம், ஜமைக்கா, மலேசியா, நைஜீரியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, கென்யா, ஸ்காட்லாந்து உள்பட 72 நாடுகளை சேர்ந்த 5,054 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளனர்.

இதில் நமது சிங்கப்பூர் சார்பில் ஒன்பது விளையாட்டுகளில் 67 தடகள வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் குறிப்பாக இந்திய வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூரரான சாந்தி பெரேராவும் தடகள பிரிவில் பங்கேற்றார்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் தொடரும் பணியிட விபத்துகள்.. வெளிநாட்டு ஊழியர்களுக்காக பாராளுமன்றம் அதிர முழங்கிய எம்.பி Melvin Yong – உடனே “சர்பிரைஸ்” பதில் கொடுத்து திக்குமுக்காட வைத்த அமைச்சர்

இந்நிலையில், நேற்று ஆகஸ்ட் 2, 2022 நடந்த 100 மீட்டர் heats-ல் சாந்தி பெரேரா ஒரு புதிய தேசிய சாதனையைப் படைத்தது மட்டுமின்றி, அரையிறுதிப் போட்டிக்கும் தகுதிப் பெற்றார்.

இந்த போட்டியில், சாந்தி பெரேராவின் 11.48 வினாடிகளில் இலக்கை கடந்தார். இதன் மூலம், தான் 2019ம் ஆண்டு 11.58 வினாடிகளில் இலக்கை எட்டிய தனது சாதனையை அவரே தற்போது முறியடித்துள்ளார். இது சிங்கப்பூரின் தேசிய சாதனை என்று சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், 100 மீட்டர் heats-ல் சிங்கப்பூர் நிச்சயம் பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கையின் இந்த சிங்கப்பெண் நிச்சயம் மெடலுடன் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கலாம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts