ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வரும் 2020 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் தடகள போட்டிகளில் புதிய வரலாற்று சாதனையை தற்போது இந்தியா படைத்துள்ளது.
ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டிகளில் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தியுள்ளார்
கடந்த 2008-ஆம் ஆண்டு பீஜிங் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் அபிநவ் இந்தியாவிற்கு முதல் தனிநபர் தங்கப்பதக்கத்தை வென்றார். இதனை அடுத்து தற்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் 2020 ஆம் ஆண்டு போட்டிகளில் தனிநபர் தங்கத்தை தற்பொழுது இந்தியாவிற்கு வென்று கொடுத்துள்ளார் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கடந்த ஆகஸ்டு 4 ஆம் தேதி நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர தடகள வீரரான மேரேஜ் சோப்ரா பங்கேற்றார். தகுதி சுற்றின் முதல் வாய்ப்பில்லையே 86.65 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து அசத்தலான தொடக்கத்தை அளித்தார் நீரஜ்.
இந்நிலையில் இன்று நடந்த ஆடவர் ஈட்டி எறிதல் போட்டிகளில் இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் நீரஜ் 87.03 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார். அவருக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பில் 87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
அதைத் தொடர்ந்து வந்த நான்காவது சுற்றில் அவர் foul ஆன நிலையில் இரண்டாவது வாய்ப்பில் அவர் எறிந்த 87.58 மீட்டர் தூரத்தை கணக்கிட்டு அவருக்கு தங்கம் வழங்கப்பட்டது.