TamilSaaga

சிங்கப்பூர் விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 55 “ஆணுறைகள்”.. ஒரே நாளில் 3, 4 பெண்களுடன் “உடலுறவு” – நீச்சல் வீரர் Ryan Lochte பகிர்ந்த உண்மை

சிங்கப்பூர்: கடந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற சிங்கப்பூர் வீரர்கள் அனைவருக்கும் அதிக அளவில் காண்டம்கள் (Condoms) கொடுக்கப்பட்டது நம்மில் பலருக்கும் தெரியாது.

என்னது விளையாட்டு வீரர்களுக்கு காண்டமா?.. என்னய்யா இது அக்கப்போறா இருக்கு? என்று ஜெர்க் ஆக வேண்டாம்… உண்மையில் உடலுறவுக்கு பயன்படுத்தப்படும் காண்டம் தான் நமது சிங்கப்பூர் வீரர்களுக்கு கொடுத்தார்கள்.

சரி… ஏன் நமது வீரர்களுக்கு காண்டம் கொடுத்தார்கள் என்று பார்ப்போம்.

கடந்த ஆண்டு ஜுலை. 23ம் தேதி ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்றது. இதில் தான் நமது சிங்கை வீரர்களுக்கு காண்டம்கள் கொடுத்தனர். எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் 1988ல் இருந்து ஒலிம்பிக் போட்டிகளில் காண்டம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் தவறாமல் ஆணுறைகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க – “கூன் விழுந்தது உடம்பில்.. என் மனதில் இல்லை” – உழைப்புக்கு Good Bye சொல்லாமல் 89 வயதிலும் போராடும் “சிங்கப்பூர் தாத்தா”

குறிப்பாக, தடகள வீரர்களுக்கு தான் அதிக அளவில் ஆணுறைகள் வழங்கப்படுகின்றன. ஏனெனில், தடகள வீரர்களுக்கு திடகாத்திரமான உடற்கட்டு இருக்கும். இதனால், உடலில் செக்ஸ் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கும். எனவே, உடலுறவில் ஈடுபடுவது மன அழுத்தம் குறைய உதவும் என்பதாலும் இதுப்போன்ற போட்டி காலங்களில் அதிகளவில் இவர்கள் உடலுறவில் ஈடுபட காரணமாக அமைவதாக கூறப்படுகிறது. தடகள போட்டிகள் மற்றும் பளுதூக்கும் போட்டிகளில் பங்குபெறும் போட்டியாளர்கள் அதிகளவில் உடலுறவில் ஈடுபடுகின்றனர் என்கின்றன புள்ளி விவரங்கள்.

கடந்த 2008ல் பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக்கின் போது 400 அறைகளில் தங்கியிருந்த தடகள வீரர்கள் மொத்தம் 4 லட்சம் ஆணுறைகள் பயன்படுத்தியதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. அதேபோல் 2016ம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியின் போது, தடகள வீரர்கள் மொத்தம் நான்கு இலட்சத்து ஐம்பதாயிரம் காண்டம்கள் பயன்படுத்தியதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது சராசரியாக ஒவ்வொரு தடகள விளையாட்டு வீரரும் 42 காண்டம்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்று தெரிகிறது. இதில் என்ன கொடுமை எனில், வீரர்கள் காமத்தை கட்டுப்படுத்த முடியாமல், தங்கள் அறைக்கு ஒரேநாளில் 3, 4 பெண்களை வரவழைத்து உடலுறவு கொள்வார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, அறைக்கு அந்த பெண்கள் வரும் வரை கூட பொறுத்திருக்க முடியாமல், கட்டிடங்களுக்கு இடையே மறைவில் வைத்து செக்ஸில் ஈடுபடுவார்கள்.

கடந்த 2000ம் ஆண்டு சிட்னியில் நடந்த ஒலிம்பிக் போட்டிகள் பற்றி, அமெரிக்க நீச்சல் வீரர் Ryan Lochte பகிர்ந்த தகவல் இதனை உறுதிப்படுத்துகிறது. Ryan 12 முறை ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து outlookindia தளத்திடம் பேசிய ரியான், “மக்கள் திறந்த வெளியில் உடலுறவில் ஈடுபடுவதை அப்போது பார்க்க முடிந்தது. புல் தரை மீதும், கட்டிடங்களுக்கு இடையிலும் என பலரும் உடலுறவில் ஈடுபட்டனர்” என்று தெரிவித்துள்ளார். மேலும், 2000 ஒலிம்பிக்கில், 70-75% விளையாட்டு வீரர்கள் பாலியல் உறவு கொண்டவர்கள் தான் என்று மதிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க – 14 ஆண்டுகள்.. நினைத்தபோதெல்லாம் மகள்களை சீரழித்த தந்தை (அரக்கன்) : வழக்கை கண்டு அதிர்ந்த நீதிபதி – தோலை உரிக்க காத்திருக்கும் சிங்கப்பூர் போலீஸ்

கடந்த, 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தமாகவே 2000 வீரர், வீராங்கனைகள் தான் பங்கேற்றனர். ஆனால், இவர்களுக்கு ஒரு இலட்சத்து பத்தாயிரம் ஆணுறைகள் தரப்பட்டது. அதவாது, ஒரு நபருக்கு 55 ஆணுறைகள்.

எனினும், கடந்த 2021ல் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் தொடரில், பெருந்தொற்று காரணமாக உடலுறவு கொள்ள ஆணுறைகள் வழங்கப்படவில்லை. எனினும், வீரர்கள் ஜப்பானை விட்டு வெளியேறிய போது, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காண்டம் கொடுக்கப்பட்டது. அப்படித்தான் நமது சிங்கப்பூர் வீரர்களுக்கும் கொடுக்கப்பட்டது. இதுவும் விழிப்புணர்வுக்காகத்தான். அதுபோல, அனைத்து நாடுகளைச் சேர்ந்த அனைத்து போட்டியாளர்களுக்கும் ஆணுறை கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts