TamilSaaga

வெளிநாட்டு ஊழியர்கள் + சிங்கப்பூரர்கள்.. இரு தரப்புக்கும் சேர்த்து விபூதி அடித்த “அதிபுத்திசாலிகள்” – இவர்கள் மூலம் சிங்கை வந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு “மெகா தண்டனை”!

நேற்று முன்தினம் (மே.20) முதல் சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் மத்தியில் அரசல் புரசலாக விவாதிக்கப்படும் முக்கிய செய்து இது என்றால் அது மிகையாகாது.

ஆம்! சிங்கப்பூரில் மொத்தம் 27 நபர்கள் ஒரு குழுவையே தட்டித் தூக்கி கைது செய்திருக்கிறது சிங்கை போலீஸ். இவர்கள் பல வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு ஆள் எடுத்திருக்கின்றனர். அவர்களை வேலைக்கு எடுக்க Work Permit-ல் தவறான தகவல்களை கொடுத்திருக்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக, வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, வேலையில் இல்லாத சில சிங்கப்பூரர்களுக்கு, மத்திய சேம நிதி தொகையையும் வழங்கியிருக்கின்றனர்.

இந்த 27 பேர் கொண்ட குழு, சுமார் 290 வெளிநாட்டு ஊழியர்களை சட்டவிரோதமாக சிங்கப்பூர் அழைத்து வந்து வேலையில் அமர்த்தியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த 27 பேரிடம் இருந்து மடிக்கணினி, தொலைபேசி உள்ளிட்ட 80 சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இப்போ சிக்கல் என்னவெனில், இவர்கள் மூலம் சிங்கப்பூர் வந்த அந்த 290 வெளிநாட்டு ஊழியர்கள் நிலைமை என்னவாகப் போகிறது என்பது தெரியவில்லை. ஏனெனில், அதில் பல இந்தியர்களும் இருப்பதாக தெரிகிறது. அப்படியெனில், கண்டிப்பாக தமிழக ஊழியர்களும் இருக்க வாய்ப்புண்டு. அப்படி ஒருவேளை அந்த 290 பேர் கொண்ட ஊழியர்கள் பட்டியலில் இருப்பவர்கள் கண்டுபிடிக்கப்படும் போது, அவர்களுக்கு 20,000 வெள்ளி அபராதமும், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இவர்களை வேலைக்கு எடுத்த நிறுவனங்களின் முதலாளிகளுக்கு குறைந்தது 5000 டாலர்கள் அபராதமும், 12 மாதங்கள் சிறையும் விதிக்கப்படும் என்று தெரிகிறது. ஆனால், இவர்களிடம் பணத்தையும் செலுத்தி, இப்போது மேற்கொண்டு சிக்கினால் 20,000 டாலர்கள் அபராதமாக செலுத்துவது மட்டுமின்றி, இரண்டு வருடம் ஜெயிலில் இருக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுவிடும்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts