TamilSaaga

சிங்கப்பூரில் 42 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டிய பிரபலம் – வரைபடம் வரைந்து பயணத்தில் சாதித்த Zoe Tay

சிங்கப்பூரில் சைக்கிள் ஓட்டுபவர்கள் தங்கள் பயணங்களை சுவாரஸ்யமாக வைத்திருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அறிய முடிகிறது.

இப்போது Zoe Tay போன்ற பிரபலங்கள் கூட தங்கள் சைக்கிள் பாதை படங்களை வரைவதற்கு முயற்சி செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரைடர்கள் முன்பு பன்றிகள், டைனோசர்கள் மற்றும் குண்டான யூனிகார்ன் போன்ற வடிவமைப்புகளை கண்டுபிடித்துள்ளனர்.

நவம்பர் 7 ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் சாகசத்தைப் பற்றி எழுதுகையில், “ஆர்வமுள்ள சைக்கிள் ஓட்டுநராக சிறிது நேரம் இந்த பாதையில் சைக்கிள் ஓட்ட முயற்சிக்க விரும்புவதாகக் கூறினார்”

அவரும் அவரது தோழியும் சுமார் 42 கிமீ பயணத்தை மாலை 4 மணிக்கு தொடங்கி, இரவு 9:30 மணியளவில் முடித்ததாக அவர் லியான்ஹே ஜாபோவிடம் தெரிவித்தார்.

அவர்கள் தங்கள் வரைபடத்தின் படி பயணம் செய்யும் பணியில் மூழ்கியதால் இரவு உணவைக் கூட உண்ணவில்லை எனவும் குறிப்பிட்டார்.

வழியில், ஹூகாங், கல்லாங், ஆங் மோ கியோ, சிங் மிங், பிஷன், டோ பயோ மற்றும் நோவேனா வழியாக சென்றுள்ளனர்.

எனினும், பயணத்தில் சவால்கள் இல்லாமல் இல்லை. டே பலமுறை தொலைந்து போனதாகவும், அடுத்து எங்கு செல்வது என்று நிறைய நேரம் செலவழித்ததாகவும் தனது பதிவில் எழுதியுள்ளார்.

“பயண வரைபடம் வரைதல் மிகவும் எளிமையானதாக தோன்றுகிறது, ஆனால் உண்மையில் இது மிகவும் சவாலானது” என்று அவர் கூறினார்.

“பயணம் சில சமயங்களில் தொந்தரவாக இருந்தாலும், அது உற்சாகமாகவும் இருந்தது. நான் புதையல் வேட்டையில் ஈடுபட்டது போல் உணர்ந்தேன், அதை முடித்த பிறகு நான் ஒரு சாதனையை உணர்ந்தேன்” என அவர் மகிழ்ச்சியை வெளிபடுத்தியுள்ளார்.

Related posts